Kanyakumari

News November 26, 2024

வீடுகளில் நூலகம் அமைத்தவர்களுக்கு விருது

image

பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த தனிநபர் இல்லங்களில் நூலகங்கள் இருந்தால் அவற்றை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று(நவ.26) அறிக்கை விடுத்துள்ளார்.

News November 26, 2024

நவ.,29 வரை மீன் பிடிக்க செல்லவேண்டாம்: மீன்வளத்துறை

image

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாடு கடற்பகுதியில் நவ.,25 முதல் 29ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகபட்சம் 75 கி.மீ வரை வீசக்கூடும். ஆதலால் மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஆலயங்கள், மீன்பிடிக்கூடங்களில் அறிவிப்பு செய்யுமாறு மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.

News November 26, 2024

கறவை மாடு பராமரிப்பு, பால் மாடு வாங்க ரூ.4,62,23,500 கடன்

image

குமரி மாவட்டத்தில் உள்ள 35 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தொடக்க வேளாண்மை, தேசிய வங்கி என பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்திருந்தனர். கறவை மாடு பராமரிப்புக்கு 890 பேருக்கு ரூ.2,74,13,500, பால் மாடு வாங்க 247 பேருக்கு ரூ.1,88,10,000 என மொத்தம் 1137 உறுப்பினர்களுக்கு ரூ.4 கோடியே 62 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 500 கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன் கூறியுள்ளார்.

News November 26, 2024

ரேசன் கடை வேலை காலியிடம் 41; 5,989 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்ட கூட்டுறவு துறையில் இயங்கும் 583 ரேசன் கடைகளில், 35 சேல்ஸ்மேன், 6 கட்டுநர் என 41 காலிப்பணியிடங்கள் இருந்தன. காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. +2,10.ம் வகுப்பு தகுதிகொண்ட பணியிடங்களுக்கு 10 முதல் பொறியியல் படித்தவர்கள் என 5,989 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று முதல் தினமும் 1000 பேர் வீதம் நேர்காணல் நடந்து வருகிறது.

News November 26, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம். #காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம். #காலை 10 மணிக்கு குமரி தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க கோரி குமரியில் இருந்து சென்னைக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நடை பயணம்.

News November 26, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 11 மணிக்கு பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் முற்றுகைப் போராட்டம்.#காலை 10:30 மணிக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க மறுப்பதை கண்டித்து கிள்ளியூர, அகஸ்தீஸ்வரம் திருவட்டார், கல்குளம் விளவங்கோடு மற்றும் தோவாளை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

News November 26, 2024

குமரி மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(நவ.,26) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News November 25, 2024

குமரி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

குமரி ஆட்சியர் அழகு மீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“குமரி ஆட்சியரகத்தில் வைத்து வருகிற 29.11.2024 அன்று காலை10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே, மீனவர், மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம்” என தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

குமரி ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

குமரி ஆட்சியரகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டஉதவிகள் கோரி 438 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 25, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

error: Content is protected !!