India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கடை போலீசார் நேற்று வெங்கடேஷ் என்பவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது மகன் திருநாவுக்கரசு(20) கஞ்சா, போதை ஊசி போன்றவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இடுவாக்கரை ஜான் கிறிஸ்டோபர், நித்திரவிளை ஆகியோரிடமும் விசாரணை நடத்தபட்டது. திருநாவுக்கரசிடமிருந்து 30 போதை ஊசி, 76 மாத்திரைகள், 22 போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
குமரி கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2.12.2024 காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில், குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக 2 பிரதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து பயன் பெறலாம்.
மிடாலம், வாணியக்குடி, மண்டைக்காடு புதூர், பகுதி 5 மீனவர்களை மிடாலம் சந்திரன் என்பவர் ஓமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்வதற்காக அழைத்து சென்றுள்ளார். தற்போது சந்திரன் அவர்களை விட்டுவிட்டு ஊருக்கு வந்துள்ளார். இதனால் துறைமுகத்தில் விசைப்படகிலேயே தங்கியுள்ள 5 மீனவர்களையும் மீட்டு சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கிள்ளியூர் M.L.A. ராஜேஷ்குமார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
#காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மார்த்தாண்டத்தில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம். #காலை 10 மணிக்கு பழுதடைத்த சாலைகளை சீரமைக்ககோரி தக்கலை அரசு மருத்துவமனை முன்பு தேமுதிக சார்பில் மறியல் போராட்டம். #காலை 10:30 மணிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக முட்டம் கடற்கரை விளங்கி வருகிறது. மாவட்டத்தில் இது 5வது முக்கிய சுற்றுலா மையமாகும். அலைகள் பாறைகளில் அடித்து சிதறும் காட்சி இங்கு ரசிக்கும்படி அமைந்துள்ளது. தினமும் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஆண்டுக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(நவ.,26) தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த தனிநபர் இல்லங்களில் நூலகங்கள் இருந்தால் அவற்றை அறிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று(நவ.26) அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாடு கடற்பகுதியில் நவ.,25 முதல் 29ஆம் தேதி வரை காற்றின் வேகம் அதிகபட்சம் 75 கி.மீ வரை வீசக்கூடும். ஆதலால் மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை ஆலயங்கள், மீன்பிடிக்கூடங்களில் அறிவிப்பு செய்யுமாறு மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 35 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தொடக்க வேளாண்மை, தேசிய வங்கி என பல வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்திருந்தனர். கறவை மாடு பராமரிப்புக்கு 890 பேருக்கு ரூ.2,74,13,500, பால் மாடு வாங்க 247 பேருக்கு ரூ.1,88,10,000 என மொத்தம் 1137 உறுப்பினர்களுக்கு ரூ.4 கோடியே 62 லட்சத்துக்கு 23 ஆயிரத்து 500 கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆவின் பொது மேலாளர் அருணகிரிநாதன் கூறியுள்ளார்.
குமரி மாவட்ட கூட்டுறவு துறையில் இயங்கும் 583 ரேசன் கடைகளில், 35 சேல்ஸ்மேன், 6 கட்டுநர் என 41 காலிப்பணியிடங்கள் இருந்தன. காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. +2,10.ம் வகுப்பு தகுதிகொண்ட பணியிடங்களுக்கு 10 முதல் பொறியியல் படித்தவர்கள் என 5,989 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று முதல் தினமும் 1000 பேர் வீதம் நேர்காணல் நடந்து வருகிறது.
#காலை 10 மணிக்கு அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம். #காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம். #காலை 10 மணிக்கு குமரி தொகுதியை தனித் தொகுதியாக அறிவிக்க கோரி குமரியில் இருந்து சென்னைக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நடை பயணம்.
Sorry, no posts matched your criteria.