India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட கடற்கரையோர காவல் நிலைய பணிகளுக்கு 24 மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுடைய மீனவ இளைஞர்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் 05.12.2024-க்குள் நேரில் வந்து விண்ணப்ப மனு பெற்று கொள்ளலாம்.இதில் கலந்து கொள்பவர்களுக்கு 07.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆட்கள் தேர்வு (சரியாக காலை 10.00 மணிக்கு ஆஜராக வேண்டும் என எஸ்பி சுந்தரவதனம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி இன்றி கூடி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு பாமக மாநில துணைத்தலைவர் ஹரிகரன் மற்றும் ரவி, ஷாஜி, ராஜ்குமார் உட்பட 4 பேர் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோட்டாறு புனித சவேரியார் கோவில் தேவாலய திருவிழாவை முன்னிட்டு, புனித சவேரியார் ஆலயம் பகுதியை சுற்றியுள்ள மதுபான கடை எண் 4858, 42A, ரயில்வே ரோடு, கோட்டார் ஜங்சன் மற்றும் மதுபான கடை எண் 4708. 6-194/4, பாறைக்கால் மடை, கோட்டார் ஆகிய கடைகளை 01.12.2024 முதல் 03.12.2024 வரை அடைத்திட மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (நவ.28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் மூன்றாவதுநாளான இன்று(நவ.28) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கான சேவைகளும் முடங்கியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: பாலமோர் 4.2, பெருஞ்சாணி மற்றும் குழித்துறை 2.4, களியல் 2.2, கோழி போர் விளை 2.2, பூதப்பாண்டி 1.2, முக்கடல் 1.6, நாகர்கோவில் 1, ஆனைக்கிடங்கு 1.4, சிவலோகம் 2, புத்தன் அணை 1.8, மாம்பழத்துறை ஆறு 1, தக்கலை 2, குளச்சல் 2 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது.ய
குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, நவீன தீவிர சிகிச்சை பிரிவுடன் தற்போது இயங்கி வருகிறது. மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும் குழந்தைகளுக்காக 35 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் 5 மருத்துவனைகளின் குழந்தை பிரிவு பயிற்சிமையமாகவும் செயல்படுகிறது.
குமரி அரசு மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தாய்ப்பால் வங்கி உள்ளது. இங்கு தற்போது 6 லிட்டர் தாய்ப் பால் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள், தங்களது குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். இது தவிர நூலகமும் உள்ளது. இதில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் பங்கு, சிகிச்சை முறைகள் தொடர்பான பல புத்தகங்கள் உள்ளன.
குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்., பிரமுகர் அனிதா, சென்னையில் நேற்று(நவ.,27) கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ஆவடி பகுதி சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியதாக, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அனிதாவை கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கு 96 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணை இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அரங்கில் வழங்கப்பட்டது. இந்த பணியாணையை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் இன்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து இவர்கள் பயிற்சிக்காக சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கடை பகுதியில் போதை ஊசி கஞ்சா போன்றவைகள் வைத்திருந்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொரியர் செயலி மூலம் போதை பூசி, போதை சாக்லேட் மற்றும் மாத்திரைகள் வாங்கியதாக தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.