Kanyakumari

News November 30, 2024

குமரியில் கஞ்சா விற்பவர்களுக்கு துணை போகிறதா போலீஸ்?

image

குமரி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் நேற்று(நவ.,29) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கலெக்டரிடம் மீனவர்கள், “கடற்கரை கிராமங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து புதுக்கடை போலீசில் தகவல் கொடுத்தால், போலீசாரே குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த கும்பல் தகவல் கொடுத்தவர்களை மிரட்டுகிறது. இப்படி இருந்தால் போலீசுக்கு எப்படி பொதுமக்கள் தகவல் அளிப்பார்கள்”என்றனர்.

News November 29, 2024

குமரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு STRICT உத்தரவு!

image

பள்ளி மாணவர்கள் சீருடையில் பென்சில் பிட், டைட்பிட், லோ ஹிப் கூடாது. பெல்ட், ஷூ அணியலாம். கை கால் நகம், தலைமுடி சரியாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். மீசை மேல் உதட்டை தாண்டக்கூடாது. குளித்து தலைவரி, அழுக்கில்லாத சீருடையுடன் பள்ளிக்கு வரவேண்டும். கைகளில் பேண்ட், கயிறு, கம்மல், மூக்குத்தி, செயின், அணிந்து வரக்கூடாது போன்ற விதிகளை கடைபிடிக்க குமரி மாவட்ட பள்ளிகளுக்கு CEO உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News November 29, 2024

ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்: கலெக்டர் அட்வைஸ்

image

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அழகு மீனா ஆசிரியர்களிடம் கூறியதாவது, “மாணவர்கள் முன்னேற்றத்துக்காக ஆசிரியர்கள் உறுதுணையாக செயல்படவேண்டும். போதைக்கு அடிமையான மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். 10, +2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றிபெற ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கழிப்பிடம், பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கவேண்டும் என அட்வைஸ் செய்தார்.

News November 29, 2024

குமரியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

image

குமரி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நாளை(நவ.,30) காலை 9 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு ஐசக் சாம்ராஜ் தலைமை வகிக்கிறார். சிவச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார். போட்டியை நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார். கார்த்திக், பாலமுரளி, பைசல், நிஷாக் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

News November 29, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் 4வது நாளாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம். #காலை 10-க்கு தக்கலை பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு மதச்சார்பற்ற தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம். #மாலை 4-க்கு உ.பி.யில் இஸ்லாமியர்கள் படுகொலையை கண்டித்து இடலாகுடியில் மமக ஆர்ப்பாட்டம்.

News November 29, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 8:30 மணி கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இஎஸ்ஐ காப்பீடு திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம். #காலை 10 மணிக்கு குளப்புரம் பஞ்., கிளார்க் செல்லன் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல் தன்னிச்சையாக நடந்து கொள்வதை கண்டித்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி உண்ணாவிரதம்.

News November 29, 2024

பள்ளிக்கு பைக், செல்போன் கொண்டு வரக்கூடாது: CEO

image

குமரி மாவட்டத்தில், மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு பைக், செல்போன் கொண்டு வரக்கூடாது. மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும். திருப்பி ஒப்படைக்க படமாட்டாது. மாணவர் மாதம் ஒருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அனுமதியின்றி விடுமுறை எடுத்தால் மறுநாள் பெற்றோருடன் மாணவர் பள்ளிக்கு வரவேண்டும் என்பது உட்பட 34 விதிமுறைகளுடன், பெற்றோரிடம் ஒழுங்குமுறை கடிதம் பெற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

News November 29, 2024

குமரி: ஒரு வாரத்தில் 339 பேரை நாய் கடித்ததாக தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்தூரில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் டாக்டர் கிங்சால் இன்று(நவ.28) தெரிவித்தார்.

News November 29, 2024

குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் டிஐஜி ஆய்வு

image

நெல்லை சரக டிஐஜி மூர்த்தி இன்று(நவ.28) கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். அவர் திருவட்டார், மார்த்தாண்டம், களியக்காவிளை மற்றும் புதுக்கடை காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அவர் ஆய்வு செய்தார். காவலர்கள் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உடன் இருந்தார்.

News November 28, 2024

நெல்லை ரயில் தற்காலிகமாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு

image

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி திருநெல்வேலி – நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் – திருநெல்வேலி பயணிகள் ரயில்கள் இருமார்க்கங்களிலும் தற்காலிகமாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது. டிசம்பர் இரண்டாம் தேதி முதல் இந்த ரயில் கன்னியாகுமரி – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் என்று இன்று(நவ.28) தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!