Kanyakumari

News December 7, 2024

குமரி செக் மோசடி வழக்கு – அரசு ஊழியர் விடுதலை

image

நட்டாலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பேரூராட்சி பணியாளர். இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் கடனாக வாங்கி செக் கொடுத்து மோசடி செய்ததாக, குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பால்ராஜ் நிரபராதி என இன்று (டிச.7) தேதி தீர்ப்பளித்தார்.

News December 7, 2024

ஆன்லைன் மோசடி குற்றவாளிகளிடம் விசாரணை

image

குமரியில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை என whatsapp எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பி ஒரு கும்பல் பலரிடம் மோசடி செய்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேரை நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் இன்ஜினியர், மருத்துவரிடம் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் ராஜஸ்தான் கோவாவில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News December 7, 2024

குமரியில் 1,017 முன்னாள் படை வீரர்களுக்கு உதவி – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 கோடியே 42 லட்சம் ரூபாய் கொடி நாள் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார். கடந்த ஆண்டு 1,017 முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு 2 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று கூறினார். இந்த ஆண்டும் அதிக வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

News December 7, 2024

நாகர்கோவிலுக்கு 2,600 டன் ரேஷன் அரிசி வருகை

image

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரெயில் மூலம் வருகிறது. இன்று காலை 42 பெட்டிகளில் 2,600 டன் ரேசன் அரிசி தெலுங்கானாவில் இருந்து நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் இருந்து அரிசி இறக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது.

News December 7, 2024

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம் என்ன?

image

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் நுண்ணீர் பாசன முறையை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்துபால், உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிர் கடன் வழங்குதல் அதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: 17 ஊராட்சிகள் தேர்வு

image

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டு 17 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ராமாபுரம் குலசேகரபுரம் கனியாகுளம் பள்ளந்துறை பறக்கை, இறச்சகுளம், காட்டுப்புதூர், பீமநகரி, தலக்குளம், தென்கரை, ஆத்திவிளை, கண்ணனூர், சுருளோடு, மருதன்கோடு, மஞ்சால மூடு, பாலூர், குளப்புரம், சூழால் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

News December 7, 2024

குமரி வீராங்கனைக்கு SDPI தலைவர் பாராட்டு

image

காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், 100 மீட்டர் தடை தாவலில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் குமரி மாவட்டம் கடையாலுமூடுவை சேர்ந்த மாணவி ஷமீஹா பர்வீன். மாணவி ஷமீஹா பர்வீனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும என SDPI தலைவர் நெல்லை முபாரக் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 7, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 456 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 75 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 663 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 420 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 358 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 159 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 7, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரி மாவட்டத்தில் இன்று(டிச.,7) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவர்களை நியமிக்க கோரி 12வது நாளாக உண்ணாவிரதம். #பிற்பகல் 2:30 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம். #மாலை 5.30-க்கு கட்டையன்விளை மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

News December 7, 2024

சாமிதோப்பு தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருஏடு வாசிப்பு வருகிற 22-ஆம் தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி தினமும் திருஏடு வாசித்து விளக்கவுரை ஆற்றப்படுகிறது. 15வது நாளான டிச.,20ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 17வது நாளான 22ஆம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது.

error: Content is protected !!