Kanyakumari

News April 14, 2026

குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதனால் பிற்பகல் 12 மணி முதல் 7 மணி வரை திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு அப்டா வழியாக 4 வழிச்சாலையில் செல்ல வேண்டும். ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் பார்வதிபுரம், பெருவிளை கோணம், இளங்கடை வழியாக செல்ல வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News April 14, 2026

குமரி: விபத்தில் பெண் பலி; உடல் உறுப்புகள் தானம்

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த லதா ஏப்.,3ம் தேதி தனது மகன் சபனுடன் பைக்கில் சென்றபோது லதா பைக்கிலிருந்து கீழே விழுந்தார். அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை GH-ல் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் GH-ல் சேர்த்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

News April 14, 2026

குமரி வரும் பிரமதர் மோடி

image

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் NDA கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் குமரி மாவட்ட தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 14, 2026

குமரியில் 4610 பேர் தபால் வாக்குப்பதிவு – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 85வ யதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8,795 பேர் உள்ளனர். இவர்களில் இதுவரையிலும் 4610 பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2819 பேரும், மாற்றுத் திறனாளிகள் 1791 பேரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

குமரி: ரூ.48,000 சம்பளம் வங்கி வேலை..APPLY NOW

image

குமரி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20 கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

News April 13, 2026

கன்னியாகுமரி: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

கன்னியாகுமரி வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

குலசேகரம் அருகே சோகம்: மூதாட்டி பலி!

image

குலசேகரம் அருகே நெடியவிளையைச் சேர்ந்த பொன்னாச்சி (78) என்ற மூதாட்டி, வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!