Kanyakumari

News December 17, 2024

வேலை வாங்கித் தருவதாக மோசடி! தந்தை – மகன் கைது

image

காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜானி. இவர் உட்பட 32 பேரிடம் வில்சன் மற்றும் அவரது மகன் சாஜின் ஆகியோர் தலா ரூ.1.40 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது ரூ.40 ஆயிரம் வீதம் திருப்பிக் கொடுத்த நிலையில், எஞ்சிய பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் செய்யப்பட்டதன்பேரில் கடையால மூடு போலீசார் தந்தை மற்றும் மகனை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

News December 17, 2024

குமரியில் அச்சப்படும் வகையில் காய்ச்சல் பரவவில்லை: அதிகாரி

image

குமரி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சல் பரவுவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியத்திடம் இன்று கேட்டபோது, மாவட்டத்தில் அச்சப்படும் அளவில் காய்ச்சல் பரவவில்லை. காய்ச்சல் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீதி அடைய தேவை இல்லை என்றார்.

News December 17, 2024

பள்ளிகளில் குழந்தைகளின் பாலியல் புகார்களை விசாரிக்க குழு

image

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் பாலியல் புகார்களை விசாரிக்க பள்ளிகளில் குறைநீக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இந்த குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News December 17, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,17) காலை 10 மணிக்கு அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு பயிற்சிக்கு செல்லும் பணியாளர்களுக்கு பேருந்து கட்டணம் மற்றும் உணவு கட்டணம் வழங்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News December 17, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,17) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், மருத்துவரை நியமிக்ககோரி 20வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.#காலை 11 மணிக்கு கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப கோருவது, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.#மாலை 3 மணிக்கு நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு.

News December 17, 2024

வீடுகள் ஒதுக்கீடு முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு?

image

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த முறைகேடு விவகாரத்தில் கைதாகிவுள்ள 2 பெண்களை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 16, 2024

கஞ்சா விற்பனை – களமிறங்கிய மாவட்ட நிர்வாகம் 

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், போலி மது விற்பனை, கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் குறித்த சுவரொட்டிகளை காவல்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து வருகிறது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பால் பூத்திலும் இது வைக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

குமரி மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.16) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி வழங்கப்பட்ட 369 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News December 16, 2024

குமரியில் இந்தாண்டு விபத்துகளில் 260 பேர் பலி

image

குமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விபத்துகள் மற்றும் உயிர்பலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 1431 வழக்குகள் நடந்துள்ளன இதில் 334 பேர் பலியாகி உள்ளனர் ஆனால் இந்த ஆண்டு விபத்துகள் எண்ணிக்கை குறைந்துள்ளது 260 பேர் விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News December 16, 2024

குமரியில் கிறிஸ்துமஸ்-க்கு முதல் நாள் லீவ்: அறிவிப்பு!

image

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான 24.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 டிசம்பர் 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அமையும் என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!