Kanyakumari

News December 21, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,21) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசி நம்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில், மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 24வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#மாலை மணிக்கு தக்கலை தூய எலிசியா ஆலய வளாகத்தில் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. MLA தாரகை பங்கேற்கிறார்.

News December 21, 2024

தடகள போட்டியில் குமரி மாணவிக்கு 2 தங்க மெடல்!

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி மையம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 34-வது தடகள போட்டிகள் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில், குமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி தனுஷா 100 மீட்டர் ஓட்டம் போட்டியிலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இவரை கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

News December 21, 2024

குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் நுழைந்தால் நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்ட வன சரணாலய பகுதிகளில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியானதால் எந்தவித அனுமதியும் இன்றி நுழைப்பவர்களால் மனித உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துமீறி நுழைப்பவர்களை பிடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

News December 20, 2024

குமரி வந்த அமைச்சர் ராஜேந்திரனுக்கு வரவேற்பு

image

குமரிக்கு வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநகர மேயருமான ரெ. மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு முன்னிலையில் குமரி பேரூர் கழக செயலாளரும்குமரி பேரூராட்சி மன்ற தலைவருமான குமரி ஸ்டீபன் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 20, 2024

#StatueOfWisdom – தமிழக முதல்வர் அறிவிப்பு

image

சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயர சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom – ஆக கொண்டாடுவோம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

News December 20, 2024

குமரி பஸ் நிறுத்தங்களில் திருவள்ளுவர் சிலை படம்!

image

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா டிச.,30,31 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதையொட்டி குமரியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பழுது நீக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் திருவள்ளுவர் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

உணவு கழிவு ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்! 2 பேர் கைது

image

களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனை சாவடியில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் பணியில் இருந்தார். அப்போது வந்த வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் ஹோட்டல் கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ஜெனிஸ் மற்றும் வாகனத்தில் இருந்த அபய குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். வாகன உரிமையாளர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News December 20, 2024

கேரள கழிவுகள் குமரிக்குள் வந்தால் காவலர்கள் மீது நடவடிக்கை: SP

image

கேரளாவில் இருந்து உணவு மற்றும் கோழி கழிவுகள் குமரி மாவட்டம் வருவதை தடுக்க SP சுந்தரவதனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையும் மீறி குமரிக்குள் கேரள கழிவுகள் வந்தால், சம்பந்தப்பட்ட சோதனை சாவடி அதிகாரி மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று SP அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 20, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,20) காலை 10 மணிக்கு பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஊராட்சித் தலைவி உட்பட 8 பேரை கைது செய்ய வலியுறுத்தி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு நாதக சார்பில் ஆர்ப்பாட்டம்.
 #மாலை 4.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து தக்கலை தபால் நிலையம் முன்பு காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 
#மாலை 5.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

News December 20, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சுசீந்திரம் திருக்கோவில் சாலை முன்பு CITU கோவில் ஆலய ஊழியர் சங்கத்தினர் காலை 10 மணி முதல், அரசு ஆணைப்படி ஊதியம் வழங்கக் கேட்டு தொடர் தர்ணா போராட்டம், திருவட்டாறு எக்செல் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டத்தில் மதியம் 1.30 மணிக்கு கலை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு இசை கச்சேரி, கரவிளாகம் கிருஷ்ணசாமி கோவிலில் பஜனை பட்டாபிஷேகத்தையொட்டி இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 8.30 மணிக்கு சுவாமி பவனி ஆகியன நடைபெறும்.

error: Content is protected !!