Kanyakumari

News April 23, 2025

குமரியில் 93 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.

News April 23, 2025

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – எஸ்பி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க எஸ்பி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று எச்சரித்துள்ளார்.

News April 23, 2025

குமரியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <>கிளிக் <<>>செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை 30 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அழகுமீனா அதில் கேட்டுக்கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

குமரியில் குற்ற செயல்கள் குறைவு: எஸ்பி தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தை ஒப்பிடு கையில் இந்த ஆண்டின் கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை மற்றும் விபத்து உயிரிழப்புகள் 60% குறைந்துள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நேற்று கூறினார்.

News April 23, 2025

முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் முதலமைச்சர் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் இம்மாதம் 30 ஆம் தேதி அதற்கான கடைசி நாள் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் தொழில் செய்ய 30 சதவீத மூலதன மானியமும் 3 சதவீத பட்டி மானியமும் இதன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

News April 23, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணி – கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க கேட்டு 127 வது நாளாக அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. மாலை மணி – பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைநிறுத்தம் குறித்து நாகர்கோவிலில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

News April 23, 2025

போக்சோ குற்றங்களை முன்கூட்டியே தடுக்க புதிய திட்டம் எஸ்பி தகவல்

image

போக்சோ குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காக ‘நிமிர்’ திட்டத்தினை குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நகர் & கிராமப்புறங்களில் சிங்கிள் பேரன்ட் வளர்ப்பில் உள்ள குழந்தைகள், தாய்,தந்தை இருவரும் வேலைக்கு செல்பவரின் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். திட்டத்தின் கீழ் நேற்று நாகர்கோவிலில் பெண் போலீசாருக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.

News April 22, 2025

குமரி மாவட்டத்தின் வரலாறு

image

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.மு.1500 முதல் 1000 ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரியின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது.தற்போதைய குமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் குமரி பற்றிய பதிவு உள்ளது.

News April 22, 2025

நாகர்கோவிலில் கோடைகால பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஏப்.22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரி மாவட்டத்தில் கோடைகால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. தடகளம், கால்பந்து, கைப்பந்து, வாள் சண்டை மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!