India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்கிறது. ஆனால் இந்த ரயில் இன்று 3 மணி 35 நிமிடம் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் பெட்டி பராமரிப்பு பணி காரணமாக காலதாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக” கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் பி விஜய் வசந்த் இன்று (டிச. 17) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து இன்று அதிகாலை 4.10 மணிக்கு கன்னியாகுமரிக்கு ரயில் வந்தது. பகல் 10 மணிக்கு இந்த ரயிலை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்ற போது ஒரு பெட்டியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். மும்பையைச் சேர்ந்த அவர் பெயர் ஷாலினி. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
“குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் கேரளா வாகனங்கள் மூலம் மருத்துவ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர். பல்வேறு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் மீண்டும் குப்பைகளை கொட்டுவது தொடர்கிறது. இனிமேலும், தொடர்ந்தால் 2025 ஜனவரி மாதத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி குப்பைகளை லாரியில் ஏற்றி கேரளாவில் கொண்டு கொட்டுவோம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர் 10,000 பேர் பயன்பெறும் வகையில் 20 கோடி ரூபாயில் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் அதிகபட்ச மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட தொழில் மையத்தை அணுக கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
காஞ்சிரங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜானி. இவர் உட்பட 32 பேரிடம் வில்சன் மற்றும் அவரது மகன் சாஜின் ஆகியோர் தலா ரூ.1.40 லட்சம் வீதம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது ரூ.40 ஆயிரம் வீதம் திருப்பிக் கொடுத்த நிலையில், எஞ்சிய பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் செய்யப்பட்டதன்பேரில் கடையால மூடு போலீசார் தந்தை மற்றும் மகனை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்பட்டது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சல் பரவுவது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியத்திடம் இன்று கேட்டபோது, மாவட்டத்தில் அச்சப்படும் அளவில் காய்ச்சல் பரவவில்லை. காய்ச்சல் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீதி அடைய தேவை இல்லை என்றார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் பாலியல் புகார்களை விசாரிக்க பள்ளிகளில் குறைநீக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இந்த குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
#இன்று(டிச.,17) காலை 10 மணிக்கு அழகப்பபுரம் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.#மாலை 5 மணிக்கு பயிற்சிக்கு செல்லும் பணியாளர்களுக்கு பேருந்து கட்டணம் மற்றும் உணவு கட்டணம் வழங்க வேண்டும் என்று கோரி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
#இன்று(டிச.,17) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், மருத்துவரை நியமிக்ககோரி 20வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.#காலை 11 மணிக்கு கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப கோருவது, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.#மாலை 3 மணிக்கு நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ஓய்வூதியர் தின கருத்தரங்கு.
Sorry, no posts matched your criteria.