India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய திருநெல்வேலி பணிமனையில் 139 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.<

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் கடந்த 2024-25 ஆம் ஆண்டு 13,000 வாடிக்கையாளர்கள் கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூபாய் 178 கோடியும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் ரூபாய் 275 கோடியும் என மொத்தம் 453 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளனர் என்று கன்னியாகுமரி கோட்ட தபால் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

காலை 9.30 மணி – பூதப்பாண்டி பேரூராட்சி ஈசாந்திமங்கலம் ஊராட்சி, இறச்சகுளம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து இறச்சகுளம் சந்திப்பில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாலை மணி – வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோட்டாறு பாவா காசிம் திடலில் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

சந்தையடி தேரிவிளையைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன். இவர் ஜேசிபி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஆதிராஜனுக்கு 30 ஆயிரம் ரூபாய் ஹரிஹரசுதன் கடன் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ஹரிஹரசுதன் கேட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஆதிராஜன் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். கன்னியாகுமரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆதிராஜனை கைது செய்தனர்.

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக திமுக அரசை கண்டித்தும், நீட் தேர்வால் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை (19.4.2025) நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் திமுக மாணவர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக இன்று தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் ரேசன் அரிசி, சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், அரிசி, பள்ளி விளையில் உள்ள மத்திய அரசின் உணவுபொருள் சேமிப்பு திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.

எறும்புக்கோட்டையைச் சேர்ந்த அபுதாகிர்(42), வலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது கம்பெனியில் அமரேஷ்வர் சுவைன் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அபுதாகிர் கண்டித்ததால், அபுதாகிரை, அமரேஷ்வர் பிளேடால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மூலவர் நாகராஜா சிலை உள்ளது இங்கு மட்டும் தான். கருவறையில் நாகராஜா இருக்கும் இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மணல் ஆடி – மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை – ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறுவது அதிசயத்தக்க ஒன்றாகும். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் வருவது வழக்கம் *ஷேர் பண்ணுங்க

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாகசத்தில் ஈடுபடுதல் இந்த வழக்குகள் அதிகமாகும்.
Sorry, no posts matched your criteria.