Kanyakumari

News December 30, 2024

கன்னியாகுமரிக்கு புதிய எஸ்.பி. நியமனம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த சுந்தரவதனம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு 1 ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News December 30, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: முதல்வர் அழைப்பு

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டு 2025-இல் #StatueOfWisdom எனப் பெயர் பெற்றுத் திகழும் வள்ளுவர் சிலை அதனை அமைத்த கலைஞர் புகழ் போல உயர்ந்து நிற்கிறது; ஆழிப்பேரலையை எதிர்கொண்டு வெள்ளிவிழா காணும் வள்ளுவரின் பேரறிவு சிலை போல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும்; பேரறிவுச் சிலையைக் கொண்டாட அனைவரும் குமரிமுனை வருக” என தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

குமரியில் தயார் நிலையில் கண்ணாடிக் கூண்டு பாலம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடிக் கூண்டு பாலம் நாளை திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு திறப்பு விழா காண இருக்கிறது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற பணிகள் முடிவு பெற்று கண்ணாடிக் கூண்டு பாலத்தின் பிரத்யேக படம் வெளியாகி உள்ளது.

News December 29, 2024

முதல்வர் குமரி வருகை; நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குமரி முனையில் நடைபெறும் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை (டிச. 30) வரவுள்ளார். மகாதானபுரம் ரவுண்டானாவில் வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் அழைப்பு வெளியிட்டுள்ளார்.

News December 29, 2024

ஆட்டோ டிரைவர் கொலை: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவரை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஷாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, மோகனுக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் ஷாஜியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மோகன் அந்தப் பெண்ணுக்கு கொடுத்த பணத்தை கேட்டதால், மோகனை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

ஆட்டோ டிரைவர் கொலை: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

image

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவரை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஷாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, மோகனுக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தற்போது அந்தப் பெண் ஷாஜியுடன் பழகி வந்துள்ளார். இதனால் மோகன் அந்தப் பெண்ணுக்கு கொடுத்த பணத்தை கேட்டதால், மோகனை ஷாஜி கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: குமரி பிரதிநிதிகள் புறக்கணிப்பு?

image

குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நாளை (டிச.30) முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழா அழைப்பிதழில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த செயல் குமரி மாவட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்து என்ன மக்களே?

News December 29, 2024

மல்லிகை பூ விலை ஒரே நாளில் ரூ.600 உயர்வு

image

தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ விலை இன்று ரூ.2600 ஆக  உள்ளது. நேற்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.2000 க்கு விற்ற நிலையில் இன்று ரூ.600உயர்ந்துள்ளது. மலர் சந்தைக்கு மல்லிகை பூ வரத்து குறைவு காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாக பூ உற்பத்தி குறைந்துள்ளதாலும் மல்லிகை பூ தேவை அதிகமாக உள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி மகேஷ் இன்று தெரிவித்தார்.

News December 29, 2024

4 எஸ்.பி தலைமையில் 1500 போலீசார் குவிப்பு 

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நாளை தொடங்கி ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 4 மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 29, 2024

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி

image

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 4.1.25 அன்று காலை 8 மணிக்கு புத்தேரி அப்டா சந்தை அணுகு சாலையில் நடைபெறவுள்ளது. *ஷேர்*

error: Content is protected !!