India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டு பாலியல் பலாத்காரம் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை தப்பிக்க விட்டதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உங்கள் வாழ்வில் புதுவசந்தம் நிறைந்து இந்த புது வருடம் உங்களுக்கு பூரிப்பை அளிக்க வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த தடைகள் மற்றும் சோதனைகளை கடந்து புது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம் என அவர் இன்று அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (டிச.31) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, திருவள்ளுவர் சிலைக்கு ஏன் விழா என்று கேட்டார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. திருவள்ளுவர் தமிழ் மக்களின் அடையாளம், திருக்குறள் தமிழர்களின் அடையாளம். அதனால் இந்த விழா கொண்டாடப்படுகிறது கொண்டாடுவோம் என்றார்.
திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று சிலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தினையும் திறந்து வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் 3 புதிய படகுகள் வாங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார். *ஷேர் செய்ய்வும்*
கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து விழா மேடைக்கு புறப்படுதல்; காலை 9.30 மணி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் ஓவியர் கண்காட்சி திறந்து வைத்து சிறப்பு மலர் வெளியிடுதல்; மேலும் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல். காலை 10.30 மணிக்கு குமரியில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்படுதல்.
குமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வளாகத்தில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் இருந்தனர்.
இன்று (டிச.30) மாலை 4 மணியளவில் குமரி காந்தி மண்டபம் முன்பு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியாகுமரி தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.30) மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு கண்ணாடி பாலம் மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருள் அங்காடி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 6.30 மணிக்கு திருவள்ளுவர் சிலை படகு குழாமுக்கு சென்று சீரொளி காட்சியினை கண்டுகளிக்கிறார். திருக்குறள் நெருப்பு 25 தகைமையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குகிறார்.
இன்று (டிச.30) காலை 10 மணி குமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 10.30 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.