Kanyakumari

News January 2, 2025

குமரியில் 2024ம் ஆண்டு ரயில் மோதி 46 பேர் பலி!

image

குமரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ரயில் மோதி மொத்தம் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் தற்கொலை செய்தவர்கள். மீதமுள்ள 35 பேர் கவனக்குறைவால் ரயில் மோதி இறந்தவர்கள் ஆவர். இது தவிர 2 பேர் ரயிலில் பயணம் செய்யும்போது உடல்நலக்குறைவால் இறந்தவர்களும் உண்டு. இதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என நேற்று நாகர்கோவில் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

News January 1, 2025

குமரியில் கடந்த ஆண்டு 3654 வழக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு 759 வழக்குகள் பதிவாகியுள்ளது. மார்த்தாண்டத்தில் 573 வழக்குகள், களியக்காவிளையில் 416 வழக்குகள், ஆறுகாணியில் 367 வழக்குகள், நித்திர விளையில் 352 வழக்குகள்,  திருவட்டாரில் 460 வழக்குகள், புதுக்கடையில் 403 வழக்குகள்,  கருங்கல்லில் 324 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News January 1, 2025

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் நடந்து சென்ற போது பைசல் கான் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி தாய் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். கைதான பைசல் கானுக்கு உதவியாக இருந்த மணலிக்கரை பகுதியை சேர்ந்த ரத்தீஷ் என்பவரை மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் இன்று கைது செய்தனர்.

News January 1, 2025

நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் மீது வழக்கு!

image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அனுமதியும் பெறாமல் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக் ராஜ் உட்பட 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 1, 2025

MLA தளவாய் சுந்தரத்தின் புத்தாண்டு வாழ்த்து!

image

புத்தாண்டு பிறந்தது, புதியவழி திறந்ததுவெற்றிப்பாதை மலருது, எட்டு திக்கும் பரவுதுபட்ட துன்பம் மறையுது, மகிழ்ச்சி மலரப்போகுதுஉற்ற நட்பு உருவாகும், அது ஏற்றம் காணும் வழியாகும், துன்பம் மறைந்து துறவரம் போகும்இன்பம்மலர்ந்து இனியவை நடக்கும்ஏற்ற நிலை அடைந்திடுவோம், இழி நிலைகளை விரட்டிடுவோம்கொடுத்து சிவந்த கரத்தின் வழி, புரட்சித்தாயின் புனிதவழிபுரட்சித்தமிழரின் உழைப்பின் வழி வெற்றிவாகை சூடிடுவோம்.

News January 1, 2025

“இனிவரும் காலம் இனிதாக அமைய வாழ்த்துகள்”

image

உலகம் முழுவதும் கலாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும் நாம் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். 2025-ஆம் ஆண்டை மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வரவேற்போம். மலரும் புத்தாண்டு நீங்காத வளங்களையும் நிறைவான மகிழ்ச்சி மற்றும் மன உறுதி தரும் ஆண்டாக அமையட்டும். இனிவரும் காலம் அனைவருக்கும் இனிதாக அமைய வாழ்த்துகள்.

News January 1, 2025

சென்னை – குருவாயூர் ரயில் நேரம் இன்று முதல் மாற்றம்

image

சென்னை எழும்பூர் – குருவாயூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் 35 நிமிடங்கள் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 9:45 மணிக்கு பதில் 10:20 மணிக்கு புறப்பட்டு இரவு 10:49 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் இரவு 11:15 மணிக்கு குருவாயூரிலிருந்து புறப்படும் ரயில்காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வரும். ரயில் 1 மணி நேரம் முன்னதாக  வந்தடையும். *ஷேர்*

News January 1, 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை

image

“உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும்; அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கும்; இதுபோல் வரும் வாழ்த்துக்களை தவிர்க்க வேண்டும்” என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News December 31, 2024

குமரியில் 1500 போலீஸ் பாதுகாப்பு

image

இன்று 2024 ஆம் ஆண்டு முடிவடைந்து 2025 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 ஷிப்டுகளாக அவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

News December 31, 2024

குமரி மாவட்ட மழை விவரம் வெளியீடு

image

குமரி மாவட்டத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேலக்கோதையாரில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கல்லாரில் 36, கீழக்கோதையாரில் 26, பாலமோர் 25, குழித்துறை 10, கன்னியாகுமரி 8, திருவட்டார், முள்ளங்கினாவிளையில் தலா 7, இரணியல், தக்கலை மயிலாடியில் தலா 6, ஆரல்வாய்மொழி 4, பேச்சிப் பாறை, குளச்சல் சுருளோட்டில் தலா 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

error: Content is protected !!