India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ.29) வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், சில கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 4,680 பேர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு நேற்று நடக்கவிருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக, டிச.6ல் நேர்காணல் நடத்தப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை (நவ.29) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.30 அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக மாறும் எனவும், அது வலுவிழந்து வரும் நவ.30ஆம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை அனைத்து துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சங்கரா மடத்திற்கு சென்று, அடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். பிறகு, சங்கரா பொறியியல் கல்லூரியை பார்வையிட இருக்கிறார். மத்திய அமைச்சரை, கே.எஸ்.பாபு மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் துணைத் தலைவர் கிரி பாபு, துணைத் தலைவர் சங்கர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 480 கி.மீ. தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இதனால், இன்று முதல் 30ஆம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
காஞ்சிபுரத்தில் வரும் 30ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாடு அறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, காவல், தீயணைப்பு, பேரூராட்சி, நகராட்சி துறை சார்ந்த அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், 044-27237107 அல்லது வாட்ஸ்அப் எண்ணை 80562 21077 தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் மூலம் தம் நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். அரசு ரீதியிலான அங்கீகாரம் பெற விரும்பினால் udyamregistration.gov.in என்ற தளத்தில் உத்யம் பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 27238837, 27236686 எண்னை அழைக்கலாம்.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை
காஞ்சிபுரம் – 22 மி.மீ, ஸ்ரீபெரும்புதூர் -40.20 மி.மீ, உத்திரமேரூர் – 19 மி.மீ, வாலாஜாபாத் – 17.30 மி. மீ, குன்றத்தூர் – 39 செ.மீ
செம்பரம்பாக்கம் – 31.20 மி.மீ என மாவட்டம் முழுவதும் 65.40 மில்லிமீட்டர் மழை பெய்த பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.