India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் நந்தகுமார்(28) ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி அர்ச்சனா(25). இவர்களது மகன் துவார சந்த் (11மாதம்) 3 பேரும் ஆட்டோவில் உறவினர் வீட்டிற்கு சென்றனர். மலையம்பாக்கம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ளவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை துவாரசந்த் பரிதாபமாக இறந்தார். மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வரும் டிசம்பர் 11,12ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
வாலாஜாபாத் ஒன்றியம் தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி (70). இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சல் முடிந்தவுடன் நேற்று முன்தினம் வழக்கம்போல் 80 செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது 35 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிந்து, ஐந்து ஆண்டுகளான நிலையில், காஞ்சிபுரத்திற்கு தனியாக மைய நூலகம் கட்டப்படும் என, நுாலகத்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளான நிலையில், இடம் தேர்வு, கட்டட அனுமதி போன்றவைக்கு காலதாமதம் ஆன நிலையில், 6 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, மைய நூலக கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
படைப்பை பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ், தனது மனைவியை கழுத்து நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசாருக்கு போனில் தெரிவித்தபோது, மனைவி பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், பலமுறை கண்டித்தும் கேட்காததால் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டதாகவும், தனது 2 மகள்களை திருநின்றவூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சரணடைய போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் தாஸ், இவர் குடும்பத்துடன் ஶ்ரீபெரும்புதூர் அருகே பாலநல்லூர் கிராமத்தில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இவரது மகன் அஸ்வின் குமார் (6) கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள, பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் மூழ்கி இன்று இறந்து கிடந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 15 வயது சிறுமியை உத்தரமேரூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்(26) என்பவர் திருமணம் செய்து அடித்து துன்புறுத்துவதாக சிறுமியின் தாய் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகைரளித்துள்ளார். இதனையடுத்து, ஜேம்ஸ் மீது போஸ்கோ வழக்கு பதிந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
வண்ணாரப்பேட்டையில், தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார், போதை மாத்திரைகள் உபயோகித்தோரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அவர்கள், குன்றத்துாரில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர். போலீசார் விசாரித்து குன்றத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), சூரியபிரகாஷ் (23), கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ்ராஜா (21), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
படப்பை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்ராஜ் – பரமேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று காலை கோபால்ராஜ் மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், மணிமங்கலம் காவல் நிலையத்தில் கோபால்ராஜ் சரணடைந்தார். பின், அங்கிருந்து தப்பிச்சென்ற அவரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பரமேஸ்வரி சிலருடன் தகாத உறவில் இருந்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.