India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் வீடில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்க கோரி, பல மாதங்களுக்கு முன் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியான பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் முகாம் நடத்தி தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஏற்ப, பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. 4,455 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. அதற்கு, ரூ.2.97 கோடி இழப்பீடு வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது. விரைவில், அவரவர் வங்கி கணக்கிற்கு இழப்பீடு கிடைக்கும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், வேலியூர் நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திருமலை நாராயணன் என்பவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பள்ளி வளாகத்தில் ஒரு மரத்தை கூட நடாதஅவருக்கு சுற்றுச்சூழல் பாராட்டு விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது எந்த விதத்தில் நியாயம் என குற்றம்சாட்டி வட்டார கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரமங்கலத்தை அடுத்த எடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பூவரசன்(28) – ஷகிலா பானு (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் சுஸ்வின்(5) – மோகநந்தன் (2) உள்ளனர். சிறுவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நேற்று விளையாடிக் கொண்டிருந்தனர். மகன்களை அழைத்துச் செல்ல ஷகிலா பானு சென்றபோது, கழிவுநீர் தொட்டியில் மோகநந்தன் சடலமாக மிதந்து கிடந்ததை கண்டு கண்ணீரில் கதறி துடித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே பிரேம் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பிரேம் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், நேற்று காலை கடையை திறந்தபோது பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளை போயுள்ளது. முதல்கட்ட விசாரணையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையானது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே காரணிதாங்கள் செக்போஸ்ட் அருகே முடிச்சூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(23) மற்றும் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த சுமன் (20) ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த நிலையில் ஒரகடம் போலீசார் நடத்திய சோதனையில் இருவரும் கைது செய்து கையில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,69,200 பசு, எருமை, கன்று போன்ற கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 6ஆம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிச.16ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடைபெற இருந்தது. இந்நிலையில், டிச.16ஆம் தேதிக்கு பதிலாக ஜன.3ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில், பயன்பாட்டில் இருந்த குழல் விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக 12 கோடி ரூபாய் மதிப்பில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டன. நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், தெருக்கள் என ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது நீண்ட நாள் உழைக்கும் என்பதால், பழுது ஏற்படுவது குறையும்.
புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்த முனுசாமி (30) மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் வீட்டில் தகராறு செய்யும் அவர், கடந்த 18ஆம் தேதி மது போதையில் தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, தந்தை காத்தவராயன் ரீப்பர் கட்டையால் முனுசாமியை அடித்ததில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காத்தவராயன் தனது மருமகன் ராஜேஷ்க்கு (42) தெரிவிக்க, இருவரும் இணைந்து முனுசாமி உடலை கல்லால் கட்டி குளத்தில் வீசினர்.
காஞ்சிபுரம் புதுப்பாக்கத்தில் குளத்தில் 3 நாட்களாக இறந்து கிடந்த முனுசாமி என்பவரின் உடலை மீட்ட போலீசார், விசாரணையில், முனுசாமி சில தினங்களுக்கு முன்பு அவருடைய தந்தை, தாயை மது போதையில் தகராறு செய்து அடித்துள்ளார். அப்போது தந்தை காத்தவராயன் கட்டையால் மகன் முனுசாமியை தாக்கிய போது அவர் இறந்துள்ளார். அதனை மறைப்பதற்கு காத்தவராயன் மைத்துனர் ராஜேஷ் உடன், முனுசாமி உடலை கல்லை கட்டி குளத்தில் வீசி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.