Kanchipuram

News January 3, 2025

குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது: எஸ்.பி.

image

காஞ்சிபுரத்தில், 2024இல் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “காஞ்சிபுரம் முழுவதும், 1,350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தலைமை இடத்தில் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் வெளிமாவட்ட குற்றவாளிகள் யாரும் நுழையாத வகையில் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து செல்கின்றனர்” என்றார்.

News January 3, 2025

தீர்மானம் போட்டதோடு சரி.. திரும்பிக்கூட பார்க்கவில்லை

image

பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது பசுமை விமான நிலையத்துக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 900 நாளை விரைவில் எட்ட உள்ளது. பல்வேறு கட்சிகள் தெரிவித்த சம்பிரதாய ஆதரவைப் போலவே, இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என தவெக சார்பில் தீர்மானம் போட்டார்களே தவிர போராட்டம் நடைபெறும் இடத்தின் பக்கம்கூட யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

News January 3, 2025

ஸ்க்ரப் டைபஸ் நோயை எப்படி தடுக்கலாம்

image

▶உண்ணிகளிடமிருந்து கடிபடாமல் இருப்பதுதான் முதல் தற்காப்பு. ▶தலையணை, படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். ▶வீட்டை சுற்றி புதார்கள் மண்டி இருந்தால், அதனை சுத்தம் செய்ய வேண்டும். ▶உண்ணிக்கொல்லி மருந்துகளை தெளிக்கலாம். ▶மலையேற்றத்துக்கு செல்லும்போது கொசு விரட்டி, உண்ணி விரட்டிகளை தேய்த்து கொள்ளுங்கள். ▶காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் வந்தால் என்ன ஆகும்

image

14 நாட்களில் காய்ச்சல், நடுக்கம், உடல் சோர்வு, உடல் வழி, இரும்பல் போன்றவை ஏற்படும். 2ஆவது வாரத்தில் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் முளைக்கு தொற்று பரவி சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து, மரணமடையும் வாய்ப்பு 30% வரை உள்ளது. இது பிரச்னைக்குரிய காய்ச்சல் என்பதை மக்கள் உணர வேண்டும். ஷேர் பண்ணுங்க

News January 3, 2025

‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுகிறது

image

காஞ்சிபுரத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவுவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ‘ரிக்கட்சியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் உயிரினங்கள், மனிதர்களை கடிக்கும்போது இந்த நோய் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 2, 2025

காஞ்சிபுரத்தில் விரைவில் புதிய பேருந்து நிலையம்

image

காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. எனவே, காஞ்சிபுரத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு 38 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கியது. பொன்னேரிக்கரை பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் அருகே காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 2, 2025

விமான நிலைய பயணியர் சேவை பயிற்சி

image

தாட்கோ எனப்படும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலைய பயணியர் சேவை அடிப்படை படிப்பு உள்ளிட்ட பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

பைக் மீது மாடு மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

image

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரி (52), தனது மகன் சிவராமனுடன் நேற்று (ஜன.1) இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து நந்தம்பாக்கம் சென்றார். அப்போது, மாடு ஒன்று திடிரென சாலையை கடக்க முயன்றபோது, சிங்காரி மீது மாடு இடித்தது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2025

புத்தாண்டில் இருவேறு உலக சாதனைகள்

image

காஞ்சிபுரத்தில் நேற்று (ஜன.1) இருவேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவி எஸ்.கயல்யா மற்றும் 4ஆம் வகுப்பு மாணவன் A.தாரகேஷ், ரோலர் ஸ்கேட்டிங் மூலம் 1 கி.மீ., தூரம் தேசிய நெடுஞ்சாலையில் காரை தள்ளி சாதனை படைத்தனர். அதேபோல், சிலம்பம் சுற்ற 100 மாணவர்கள் Fire Stick எனும் நிகழ்வினை 1 மணி நேரம் தொடர்ச்சியாக நடத்தி உலக சாதனை படைத்தனர். இவை, நோபல் ரெக்கார்டர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

News January 1, 2025

ஜன.3ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேற்று சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பொங்கல் பரிசு தொகுப்பினை, ஜன.3ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யவும், ஜன.9ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!