Kanchipuram

News January 5, 2025

காஞ்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு

image

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இம்ந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு உள்ளது. சுகாதாரத்துறை அனுமதித்த 450 பணியிடங்களில் 160 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களில், 12 மருத்துவர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

News January 5, 2025

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் விளக்கம்

image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலர் பிரச்னை செய்வதாக கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறினார். வெளிநபர்கள் அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் இதுபோல் உள்ளே நுழைந்து பிரச்னை செய்கின்றனர். கோயில் பணியாளர்கள் சீருடையில் இருப்பார்கள். அவர்களுக்கு சீருடை வழங்கி இருக்கிறோம். இதுபோல் வெளிநபர்கள் உள்ளே வந்து கோயில் நிர்வாகங்களில் தலையிடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News January 5, 2025

அவமரியாதைக்கும், அவதிக்கும் உள்ளாகும் பக்தர்கள்

image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரவுடிகள் சிலர் கோயில் ஊழியர்கள்போல் உள்ளே நுழைந்து, பக்தர்களின் வருகையை ஒழங்குபடுத்துவதுபோல் தகராறில் ஈடுபடுகின்றனர். சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் தனியே உள்ளே அழைத்துச் செல்கின்றனர். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தகாத வார்த்தைகளால் பேசுவதாகக் கூறப்படுகிறது.

News January 4, 2025

பக்தர்களோடு பக்தராக வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்

image

தமிழக முதல்வரின் மனைவியான துர்கா ஸ்டாலின், காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை 6 மணி அளவில் பக்தர்களோடு பக்தராக எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார். திருக்கோவிலுக்கு வந்த அவரை, கோயில் மணிக்காரர் அழைத்து சென்று சிறப்பு அர்ச்சனை மற்றும் சாமி தரிசனம் செய்து வைத்தார். பொதுமக்களோடு பக்தராக வந்த அவரை அடையாளம் கண்ட சக பக்தர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

News January 4, 2025

அதிமுக சார்பில் படப்பையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

வண்டலுார் – வாலாஜாபாத் சாலை அருகே உள்ள படப்பையில், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணமான திமுக அரசையும், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து வரும் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு குன்றத்துார் ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News January 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணியை நியாய விலைக் கடை பணியாளா்கள் தொடங்கினா். டோக்கன்களில் பொருள்களின் விவரம், வழங்கப்படும் தேதி, நேரம் போன்றவை குறிப்பிடப்படப்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும்.  பொதுமக்கள், 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலாம். உங்களுக்கு வந்துச்சா?

News January 4, 2025

அகிம்சை முறையில் போராடினால் காவல்துறை அனுமதிக்க வேண்டும்

image

ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவரும், ஶ்ரீபெரும்புதூர் எம்.எல். ஏவுமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும் அகிம்சை முறையில் போராடினால் காவல்துறை அனுமதிக்க வேண்டும், அதில் அரசியல் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்க சிலர் முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News January 4, 2025

காமாட்சி அம்மன் கோயில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு ஆராதனையும் வரவேற்பும் அளித்து மரியாதை செலுத்தினர்.

News January 3, 2025

முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் 

image

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் – வாலாஜாபாத் சாலை படப்பையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத தமிழ்நாடு அரசை கண்டித்தும், அதிமுக சார்பில் படப்பையில் வருகின்ற 9ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

News January 3, 2025

எல்லைகள் விரிவாக்கம் அறிவிப்பு: காஞ்சிபுரம் இல்லை

image

தமிழகத்தில் 16 மாநகராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதில் காஞ்சிபுரம் மாநகராட்சி இடம்பெறவில்லை. இதனால், மாநகராட்சியை சுற்றியுள்ள 11 ஊராட்சி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 11 ஊராட்சிகளை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டிருந்ததற்கு, கிராம ஊராட்சி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!