Kanchipuram

News January 12, 2025

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஜன.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என நம்பபடுகிறது. ஷேர் பண்ணுங்க

News January 12, 2025

மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்த தவெகவினர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானநிலையம் அமைய உள்ள நிலையில் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து கலந்துரையாட உள்ளார். இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு இன்று (ஜன.11) காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தவெக வழக்கறிஞர் வெங்கட் மற்றும் தவெக பொருளாளர் தலைமையில் மனு அளித்தனர்.

News January 11, 2025

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் திட்டம்

image

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி மூன்றாம் வாரத்தில் இந்த சந்திப்பு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 11, 2025

சாலை விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு

image

நெமிலி அசநெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சஞ்ஜய் (25), அரக்கோணம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (28) இருவரும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்தனர். கடந்த 9ஆம் தேதி இரவு காஞ்சிபுரம் – திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே இவர்கள் சென்ற பைக் மீது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 11, 2025

போலி ஆவணம் கொடுத்து ஜெயித்த கவுன்சிலர் தகுதி நீக்கம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27ஆவது வார்டு பெண்களுக்கான பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 2022இல் தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஷாலினி, தான் பட்டியலின் பெண் என போலியாக ஆவணம் தயாரித்தது தெரிந்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி, ஷாலினி பதவி இழந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், தன் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டினார்.

News January 11, 2025

குழந்தையை கொலை செய்த தாய் கைது

image

வாலாஜாபாத், களியனூரைச் சேர்ந்தவர் பூமிகா (24). இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த வாலிபரோடு நெருக்கமாக பழகி வந்ததால் கர்ப்பமானார். நேற்று முன்தினம் (ஜன.9) பூமிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று (ஜன.10) வள்ளுவப்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில், குழந்தையை பூமிகா வீசி கொலை செய்தார். சிவகாஞ்சி போலீசார் பூமிகாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 11, 2025

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதும். விருப்பம் உள்ள பதிவுதாரர்கள் www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

புதிய தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பிக்க அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

ரூ.1.23 கோடி வரி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில், வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்தி வந்த 1,667 பேருக்கு, 1.23 கோடி ரூபாய் வரி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து, வரி விதிக்கும் நடவடிக்கை வாயிலாக 5.34 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

கர்நாடக மாநில துணை முதல்வர் சுவாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று (ஜன.9) கர்நாடக மாநில துணை முதல்வா் சிவக்குமாா் சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் மகா சுதர்சன யாகம் செய்து வழிபட்டாா். ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், பிரத்தியங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

error: Content is protected !!