India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்தித்து பேச பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. சண்முகம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்கனவே கடிதம் வழங்கியிருந்தனர். பரந்தூர் மக்களை கட்சி தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க உள்ளார். இந்த நிலையில், இந்த சந்திப்புக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பூஜைக்கு தேவையான பூக்களின் தேவை அதிகரித்ததால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று (ஜன.13) பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக, 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000க்கு விற்கப்பட்டது. விலை உயர்ந்தாலும், பூ வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கடை சத்திரம் களைகட்டியது. பொதுமக்கள் பூஜை மற்றும் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் (76). பூசாரியான இவர், நேற்று (ஜன.13) காலை ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையை கடக்க முயன்றபோது தொழிற்சாலை வேன் மோதி உயிரிழந்தார். இதையறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரி இறந்தவரின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்களும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்கள் என மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில், 21.01.2025 முதல் 24.01.2025 வரை பின்வரும் கிராமங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகில் பணியாற்ற ஒருவர் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியான https://Kancheepuram.nic.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேற்படி விண்ணப்ப படிவத்தினை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 58 ஊராட்சிகள் உள்ளன. அதேபோல் 16 ஒன்றிய குழு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்றகூட்டம் நடைபெற்றது. ஶ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு என பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 2 ஆவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் தியாகராஜன் கொசு வலையை போர்த்தியவாறு கூட்டத்திற்கு வந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக தொழுநோய் மருத்துவர், பேச்சுப்பயிற்சியாளர், செவித்திறன் பயிற்சியாளர், அறிவாற்றல் பழக்குனர் ஆகிய 4 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்ற. விபரங்களை https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன 17ம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டுமென காஞ்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பெரும்பாலான விவசாயிகளின் விளை நிலங்களில், அளவுக்கு அதிகமாக உரம் போட்டு, மண்ணின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த, நிலத்தில் காரம், அமிலம், உப்புத்தன்மை மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆகிய உரங்கள் போட வேண்டும் என விளக்கும் தகவல்கள் அடங்கிய மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. நடப்பு 2024 – 25ஆம் நிதியாண்டில் 7,100 பேருக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பொன்னேரிக்கரையில் உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு பகுதியிலேயே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலமான 19 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. பரந்துார் விமான நிலையம், புறநகர் பேருந்து நிலையம் என சகல வசதிகளும் இப்பகுதியை சுற்றிலும் அமைகின்றன. இதனால் வீட்டு மனைகள் விற்பனை விலை அதிகமாகியுள்ளது.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார். நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் 1 ஏக்கர் நெற்பயிருக்கு 518 ரூபாய் வழங்கப்படுகிறது. நிலக்கடலைக்கு 482 ரூபாய், ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகள், 1,160 ரூபாய் பிரீமியம் கட்டணமாக மார்ச் 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.