Kanchipuram

News January 17, 2025

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

image

குன்றத்தூர் வட்டம், சிக்கராயபுரம் கிராமம், தங்கம் அவென்யூ, 10ஆவது தெருவில் உடல் உறுப்பு தானம் செய்த குணசுந்தரி, என்பவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், குன்றத்தூர் வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

News January 17, 2025

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த பொதுமக்களை, காரில் இருந்து இறங்கி சென்று சந்தித்து காணும் பொங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின், பொதுமக்களின் அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அங்கிருந்த குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் ஸ்டாலின் இனிப்புகளையும் வழங்கினார்.

News January 17, 2025

பொதுமக்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் தன்னை பார்ப்பதற்காக காத்திருந்த பொதுமக்களை காரில் இருந்து இறங்கி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின், பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். பின்பு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News January 17, 2025

காஞ்சிபுரத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

image

+1, +2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி வரும் 22ஆம் தேதி காஞ்சிபுரம் கா.மு.சு. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நடக்கிறது. போட்டி நாளன்று மாணவர்கள் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.10,000, 2ஆம் பரிசு ரூ.7,000, 3ஆம் பரிசு ரூ.5,000 உடன் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர்.

News January 16, 2025

+2 மாணவர்கள் 3 பேர் கொலை வழக்கில் 4 பேர் கைது

image

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எல்லைக்குட்பட்ட வழுதவாடி ஏரியில், நேற்று (ஜன.15) 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூவர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவர்களை கொலை செய்த வழக்கில் 4 இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

News January 16, 2025

+2 மாண்வர்கள் 3 பேர் கொலையா?

image

பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் 3ஆகிய 12ஆம் வகுப்பு மாணவர்கள் முகம் சிதைக்கப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், பரத்திற்கும் சிறுமையூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மோதலில் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடற்கூறாய்வுக்கு பிறகு தெரியவரும்.

News January 16, 2025

12ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மர்ம மரணம்

image

உத்திரமேரூர் அருகே உள்ள ஏரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள், பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. முன்பகை காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

News January 15, 2025

வடகலை – தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்

image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பார்வேட்டை உற்சவத்தின்போது, வடகலை – தென்கலை பிரிவினர் இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. பார்வேட்டை உற்சவத்துக்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு மண்டகப்படி நடக்கும்போது, இரு பிரிவினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, வீதி உலா நடைபெற்றது.

News January 15, 2025

பொன்னேரிகரையில் திமுக சார்பில் பொங்கல் விழா

image

காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் வழிகாட்டுதலில், பொன்னேரிக்கரை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு தூணருகே, நேற்று (ஜன.14) ஒன்றிய செயலர் பி.எம் குமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News January 15, 2025

3 டன் கரும்புகளை கொண்ட மாட்டு வண்டி

image

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார்- செல்வி தம்பதியினர், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 3 டன் எடை கொண்ட செங்கரும்பினால் மாட்டு வண்டி, 5 அடி உயரமுள்ள 2 காளை மாடுகளை உருவாக்கி அசத்தியுள்ளார். ஏராளமானோர் அப்பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.

error: Content is protected !!