Kanchipuram

News January 19, 2025

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகும் ‘மாஸ்டர் பிளான்’ – 1

image

தமிழகத்தில் முதன்முறையாக பரந்துார் விமான நிலையத்தை தமிழக அரசு, பொது – தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, ‘டிட்கோ’ எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. பரந்துாரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் 2ஆவது விமான நிலையம் அமைய உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து, 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

News January 19, 2025

எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் சந்திக்கலாம்

image

தவெக தலைவர் விஜய் நாளை பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது, “மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று. மற்ற மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம்” என்றார்.

News January 19, 2025

ஏகனாபுரம் திடலில் சந்திக்க உள்ளதாக தகவல்

image

நாளை மறுநாள் (ஜன.20) காலை 10 மணி முதல் பகல் 1 மணிக்குள் சந்திக்க காவல்துறை அனுமதி எனவும் தகவல் வெளியாகி உள்ளது, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை ஏகனாபுரம் திடலில் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

News January 19, 2025

விஜய்க்கு கட்டுப்பாடுகள் இல்லை

image

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். இதற்காக போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நாளை (ஜன.20) விஜய் வந்து செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதற்காக எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மக்களை சந்திப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

News January 19, 2025

காஞ்சிபுரத்தில் விடிய விடிய மழை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், வல்லம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இன்றும் (ஜன.19) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க

News January 18, 2025

இயற்கை ஊக்குவிக்கும் வகையில் பொங்கல் விழா

image

காஞ்சிபுரம் பகுதியில் இயங்கும் தமிழகம் இலவச கல்வி பயிற்சி நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கிளம்பி பகுதியில் ஊராட்சி திடலில் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்களுக்கு கலை நிகழ்ச்சி விழா நடைபெற்று. பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

News January 18, 2025

மாவட்ட கண்காணிப்பாளர் உடன் விஜய் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

image

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை நாளை மறுதினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு சந்திப்பில் ஈடுபட்டார்.

News January 18, 2025

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ’76 சி’ அரசு பேருந்து, பென்னலூர் கூட்டு சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் காயமடைந்து, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2025

விஜய் பரந்தூர் செல்வதற்கு காவல்துறை அனுமதி

image

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ளார். விஜய் பரந்தூர் செல்வதற்கு 20ஆம் தேதி காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட களத்திற்கு செல்கிறார். மக்களை சந்திக்க ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று (ஜன.17) பார்வையிட்டார்.

News January 18, 2025

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (ஜன.18) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், சேக்குப்பேட்டை, டோல்கேட், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், ஆட்சியர் அலுவலகம், கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, செவிலிமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

error: Content is protected !!