India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் பல கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 18-35 வயதுடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் நபர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அறிவிப்பின் படி, தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் 31.01.2025 அன்று ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் நிரப்பப்படுகின்றன. விவரங்களுக்கு dadskillkpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரத்தில், இணை சார் – பதிவாளர் அலுவலகம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய மூன்று பதிவாளர்கள் அலுவலகங்கள் என மொத்தம் ஐந்து சார் – பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே பதிவுத்துறை மாவட்ட எல்லைக்குள் செயல்படுகின்றன. 2022 – 23ம் ஆண்டை காட்டிலும், 2023 – 24ஆம் ஆண்டில் பதிவுகளின் எண்ணிக்கையும், அதன் வாயிலாக பரிவர்த்தனையான சொத்துக்களின் மதிப்புகளும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே பாமகவை சேர்ந்த தமிழரசன் என்பவர் எரித்து கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் பேரணியாக சென்று போலீசாரின் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். நீதி கிடைக்கும் வரை தமிழரசன் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போலீசாரின் தடுப்புகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் எதிரே காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 25ஆம் தேதி மாலை நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார், இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுரவு மையக் கூட்ட அரங்கில் இன்று (ஜன.23) மாவட்ட கண்காணிப்பாளர் கா.சு.கந்தசாமி தலைமையில், அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கா.ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஆட்சியர் பயிற்சி மிருணாளினி ஆகியோர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகிய 2 பணியிடங்கள் என மொத்தம் 3 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன், பிப்.,6க்குள், மாமல்லன் நகரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெறும் இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் இதில் கலந்துகொள்ளலாம்.
தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய வாக்காளர் தின விழாவில், ஆளுநர் விருதை வழங்க இருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.