Kanchipuram

News February 16, 2025

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

image

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்.<<>>

News February 16, 2025

பிரபல நகைக்கடையில் திருடிய பெண் கைது

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன் (35) சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். போலீசார் கேமராக்களை ஆய்வு செய்து, சின்னக்காஞ்சிபுரம் பல்லவா்மேடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி (48) என்பவரை கைது செய்தனா். திருடிய ரூ.2.5 லட்சம் மதிப்புடைய வைர வளையல் உள்ளிட்டவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

News February 16, 2025

3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

image

மதுராந்தகத்தில், நேற்று (பிப்.15) சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கீரனூர் அருகே சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது, லாரி திடீரென நின்றதால், மணல் ஏற்றி வந்த லாரி சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிலிண்டர் லாரி சற்று முன்னாள் நகர்ந்து சென்றதால், சென்னை மார்க்கமாக சென்ற கண்டைனர் லாரி மீதும் மோதியது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

News February 15, 2025

நாளை துாப்புல் பரகால மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை

image

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு என தனி சன்னதி உள்ளது. இங்கு நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை பரகால மடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு நாளை காலை 8.30 முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 7.00 மணி வரை நடக்கிறது என துாப்புல் பரகாலமடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 15, 2025

ரூ.100 க்கு விற்பனையான ரோஜா பூ

image

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு, ஓசூரில் இருந்து பெங்களூரூ ரோஜா வகைகளான தாஜ்மஹால், ஒயிட், எல்லோ, கிராண்ட் காலா, அவலான்ஜி போன்ற பலவகை ரோஜா விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், காஞ்சிபுரம் பூக்கடைகளில், 20 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரோஜா ரூ.800க்கு விற்கப்பட்டது. சாலையோர பூ வியாபாரிகள், ஒரு ரோஜாவை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

News February 15, 2025

பெட்டிகடையில் 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

ஸ்ரீபெரும்புதுார், பால்நல்லுார் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வல்லம் – வடகால் சிப்காட் சாலையில், பால்லுார் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கலா, 44, என்பவரை கைது செய்தனர்..

News February 15, 2025

பாதாள சாக்கடையில் அடைப்பு, பொதுமக்கள் அவதி

image

காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக மீன் மார்க்கெட் சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்’ வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது

News February 15, 2025

காஞ்சியில் ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் துவக்கம்

image

கடந்த மாதம் 12ஆம் தேதி ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வர்ணம் தீட்டுதல், உட்புறத்தில் தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சமீபத்தில் முடிந்தது. அதனையொட்டி காய்கறி, மளிகை உள்ளிட்ட வியாபாரத்தை நேற்று வியாபாரிகள் தொடங்கினர். இந்நிகழ்வில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் பங்கேற்றார்

News February 15, 2025

பட்டு தொழில் நலிவு: நெசவாளர்கள் புலம்பல்

image

இந்தியாவின் ஜவுளித்துறையில், குறிப்பிட்ட பங்கு வகிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது. இன்றைக்கும், நெசவு தொழிலை நம்பி இங்கு பிழைத்து வருகின்றனர். கூட்டுறவு கைத்தறி பட்டு சங்கங்கள் வாயிலாக ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல், விற்பனை நடக்கிறது. இந்நிலையில் பட்டு இழையால் நெய்யப்படாத பேன்சி ரக சேலைகள் அதிகளவில் இங்கு விற்பனை செய்யப்படுவதால், பட்டு தொழில் நலிவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது

News February 15, 2025

சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட குன்றத்தூர்

image

ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரிலும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும், தாருகாசுரனை திருப்போரூரிலும் சம்ஹாரம் செய்தார் முருகன். திருப்போரூரில் சம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் குமரன் அமர்ந்த மலைதான் குன்றத்தூர் மலை. சிவன், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த தலமும் இதுதான். முருகன் வழிபட்ட ஈசன் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு குன்றத்தூர் மலையடிவாரத்தில் அருள்பாலிக்கிறார்.

error: Content is protected !!