India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஸ்ரீராம்பிரசாத், செல்வக்குமார், சந்திரசேகர் ஆகிய மூவரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில், பாராட்டுச் சான்றிதழும், ஊக்க தொகையாக ரூ.10 ஆயிரமும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 3 பேரும் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்த, அந்த ரூ.10,000 பணத்தையும் வட்டார கல்வி அலுவலரிடம் வழங்கினர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2025ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக்குழு தலைவர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உறுப்பினர்கள் குழுவினர் நலத்திட்டங்களை வழங்கி பின்னர் ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில், தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணிகளுக்கு நாளைக்குள் (செப்.12) விண்ணப்பிக்கலாம். Physiotherapistக்கு BPT படித்திருக்க வேண்டும். Social Workerக்கு Post Graduate in Sociology படித்திருக்க வேண்டும். Data Entry Operatorக்கு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.
சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்டன் ஜெரினோ(30). இவர், நேற்றிரவு செட்டிப்புண்ணியம் அரசு பள்ளி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செட்டிபுண்ணியம் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் உள்ள ஏரி அருகே சாலை வளைவில் திரும்பும்போது, கருவேல மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் போலிசார் விசாரிக்கின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதி வழங்கும் பிரபல எலக்ட்ரானிக் தயாரிப்பு தொழிற்சாலையான சாம்சங் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மூத்த குடிமக்களுக்கான அம்மன் கோயில் சுற்றுலா, காஞ்சிபுரம் கோயில் சுற்றுலா மற்றும் நவ திருப்பதி தரிசனம் போன்ற சிறப்பு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் செப்.21 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி மற்றும் அக்.5 மற்றும் 12 ஆம் ஆகிய 4 தேதிகளில் ரூ.500 கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், திருமணி முத்தாறு பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இணைந்து சேலத்தில் திருமணிமுத்தாறை மீட்டெடுப்பது தொடர்பாக செப்.15- ஆம் தேதி தொடங்கி செப்.26-ஆம் தேதி வரை 12 நாள்களில் 12 வகையான மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இந்த விழா அழைப்பிதழை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காஞ்சிபுரத்தில் வெளியிட்டார்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்துள்ள திட்டத்திற்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு வரையறையை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியது. இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விமான நிலையத்திற்கு ஆய்வு வரைவு வழங்கியது கடும் கண்டனத்திற்குரியது என்றும், ஆய்வு வரையறையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று(செப் 10) நடைபெற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று 2,521 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேவலூர் குப்பம் ஊராட்சி, செட்டி பேடு பகுதியில் உள்ள அப்பல்லோ பொறியியல் கல்லூரியில், ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி நாளை (செப்.11) காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.