Kanchipuram

News September 12, 2024

நான்காவது நாட்களாக 1000 தொழிலாளர்கள் போராட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல எலக்ட்ரானிக் பொருள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலையில் நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு, பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாட்களாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 12, 2024

பேரூராட்சிகளில் 19 பேர் பணியிடை மாற்றம்

image

தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா நிர்வாக காரணங்களுக்காக நீலகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் வரித்தண்டலர்கள், இளநிலை உதவியாளர்கள் என 19 பேர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 12, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்?

image

காஞ்சிபுரம் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பிற மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை என மாநில தேர்தல் ஆணையர் பாலசுப்ரமணியன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 12, 2024

குரூப் 2 மற்றும் குரூப் 2- ஏ தேர்வர்களுக்கு சிறப்பு பேருந்து

image

குரூப் 2 மற்றும் குரூப் 2- ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு வரும் செப்.14-இல் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு எழுதுபவர்கள், தோ்வு மையம் செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய வட்டாரங்களில் உள்ள தோ்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

காஞ்சியில் 2வது நிதி ஆண்டின் அறிக்கை தயாரிக்கும் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2வது நிதி ஆண்டின் அறிக்கை தயாரிக்கும் கூட்டம் இன்று (செப்.12) காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. திட்ட முன் வரைவுகளை, மாவட்ட முதன்மை அலுவலர்களால், இறுதிபடுத்தப்பட உள்ளன. ஆகையால், வேளாண், பொது சுகாதாரம், கால்நடை உள்ளிட்ட 32 துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்து உள்ளார்.

News September 12, 2024

பவளவிழா முப்பெரும் விழாவுக்கு அமைச்சர் அழைப்பு

image

சென்னையில் செப் 17-ஆம் தேதி திமுக பவளவிழா – முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதற்கு, காஞ்சி வடக்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழகச் செயல் வீரர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆயிரக்கணக்கில் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 12, 2024

துளசிமதியை கௌரவித்த அமைச்சர்

image

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 12, 2024

சங்கரா செவிலியர் கல்லூரி திறப்பு விழா

image

காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூரில் உள்ள சங்கரா செவிலியர் கல்லூரி (பெண்கள்) திறப்பு விழா, வருகிற 15ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியா சுவாமிகள், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், கவுரவ விருந்தினர்களாக டாடா சன்ஸ் நிறுவன சந்திரசேகர், டி.சி.எஸ். நிறுவன சி.இ.ஒ. கிருத்திவாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 11, 2024

பள்ளி வளர்ச்சிக்கு நிதியை கொடுத்த ஆசிரியர்கள்

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஸ்ரீராம்பிரசாத், செல்வக்குமார், சந்திரசேகர் ஆகிய மூவரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில், பாராட்டுச் சான்றிதழும், ஊக்க தொகையாக ரூ.10 ஆயிரமும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 3 பேரும் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்த, அந்த ரூ.10,000 பணத்தையும் வட்டார கல்வி அலுவலரிடம் வழங்கினர்.

News September 11, 2024

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நாளை ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2025ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக்குழு தலைவர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளின் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், உறுப்பினர்கள் குழுவினர் நலத்திட்டங்களை வழங்கி பின்னர் ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!