India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரத்தில் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை, காஞ்சிபுரம் சிப்காட் தொழிற் பூங்காவில் 640 கோடி மதிப்பில் அமைக்க உள்ளது. இதில் நவீன முறையில் கண்ணாடிகளைத் தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், மொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடமச்சி, பினாயூர், காவணிப்பாக்கம், மதுார், சிறுதாமூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களில் மயில்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மயில்கள் தண்ணீர் தேடி, விவசாய நிலங்களுக்கு வருவதால் அவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. எனவே, இப்பகுதிகளில் மயில்கள் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட துாரத்திற்கு தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க உத்திரமேரூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் செப்.21ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளன. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18- 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதை SHARE பண்ணுங்க
மணிமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் லக்ஷனா(17), படப்பை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று மதியம் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. குடும்பத்தார், கதவை உடைத்து பார்த்தபோது லக்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததால், லக்ஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளராக நேற்று பதவியேற்றார். பதவி ஏற்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அம்மாநில காங்கிரசார் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரி, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தி அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 12 பேர் பங்கேற்றனர். இரண்டாம் நாள் நிகழ்வான நேற்று 427 பேர் பங்கேற்றனர். இதில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம், நல்லுாரில், ரூ.53 கோடி செலவில், 1.06 லட்சம் சதுர அடி பரப்பில் சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி கட்டப்பட்டுள்ளது. நேற்று இதனைத் திறந்து வைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. என்.எல்.பி., கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பால், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் மகேஷ்(24), சாகுல், ஜெகதீஷ், ஜெகன் ஆகிய 4 பேரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இவர்களது நண்பர்கள் விஜய், செல்வகுமார் இருவரையும் மது அருந்த 4 பேரும் அழைத்தனர். அவர்கள் இருவரும் மது அருந்த வரவில்லை என கூறியதால், ஆத்திரமடைந்த 4 பேரும் விஜய் மற்றும் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கத்தியால் வெட்டியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.