Kanchipuram

News September 18, 2024

காஞ்சிபுரத்தில் பவள விழா பொதுக் கூட்டம்!

image

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற, திமுக பவள விழா விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வரும் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

News September 18, 2024

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமையான நாளை, காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்து உள்ளது

News September 18, 2024

காஞ்சியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (7 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்.24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் அதிக வெப்பநிலை 2 டிகிரி முதல் 4டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்ககூடும்.

News September 18, 2024

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்

image

காஞ்சிபுரத்தில் பிறந்த திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் இன்று உடல்நல குறைவால் மீஞ்சூரில் காலமானார். கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கா.சுந்தரம். கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், சுந்தரத்திற்கு ‘அண்ணா’ விருது வழங்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.

News September 18, 2024

இன்றும், நாளையும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்றும், நாளையும் செப்.18, 19) காஞ்சிபுரம் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News September 18, 2024

திமுக உறுப்பினருக்கு அமைச்சர் அஞ்சலி

image

வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள மண்ணிவாக்கம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் எம்.டி.சண்முகம்(72). திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் இயற்கை எய்தினார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்ததும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பரசன் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

News September 18, 2024

கோயிலில் சுற்றிய மாணவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

image

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், உறவினர் யாருமின்றி, 9 வயது சிறுவன் தனியாக சுற்றி வந்துள்ளான். கோவிலில் பக்தர்கள் அவனிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். உடனடியாக, சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், சிறுவனை மீட்டு, செங்கல்பட்டைச் சேர்ந்த அந்த 5ஆம் வகுப்பு மாணவனை அவனது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

News September 18, 2024

வரும் 20 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், வரும் செப். 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேற்று அறிவித்தார்

News September 18, 2024

வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது!

image

காஞ்சிபுரம் சந்தைக்கு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளியின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பூக்கடை சத்திரம் தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திராவில் வெள்ள பாதிப்பு உள்ளதால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.40க்கு விற்கப்படுகிறது என்று கூறினார். உங்கள் பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளதா?

News September 18, 2024

காஞ்சிபுரத்தில் 5,492 தாய்மார்களுக்கு ரத்த சோகை

image

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், சுகாதாரத் துறை கடந்தாண்டு நடத்திய ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் 17,422 கர்ப்பிணிகள், குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்களை சுகாதாரத் துறையினர் கண்காணித்தபோது, 5,492 தாய்மார்கள் ரத்த சோகையுடன் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிறந்த 17,422 குழந்தைகளில், 1,027 குழந்தைகள், இரண்டரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாக பிறந்துள்ளது

error: Content is protected !!