Kanchipuram

News October 9, 2024

செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது

image

காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே கரும்பாக்கம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடி அருகே ஆவின் டீ கடை நடத்தி வருகிறார். இங்கு டீ குடித்த 5 பேர், கடையில் வேலை செய்து வரும் ஜிதேந்தர் மண்டல் என்பவருடைய செல்போனை நேற்று அதிகாலை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

News October 8, 2024

காஞ்சிபுரம் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான திமுக தலைமை அலுவலகத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில், வட கிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

நியாய விலை கடை பணியாளர்கள் விண்ணப்பம் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாகவுள்ள 35 விற்பனையாளர் மற்றும் 16 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.drbkpm.in என்ற இணையதளத்தில் 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயஶ்ரீ அறிவித்துள்ளார்.

News October 8, 2024

வழக்கு உள்ளதால் தொழிற்சங்கம் அமைப்பதில் சிக்கல்

image

ஸ்ரீ பெரும்பதூர் சாம்சங் தொழிற்சாலை போராட்டத்தில் தீர்வு காணும் முயற்சி மேற்கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போராட்டம் குறித்து பேசிய போது, “ஊழியர்கள் பிரச்னையை முதல் நாளிலிருந்து முதல்வர் கவனித்து வருகிறார். தொழிற்சங்கம் அமைக்க வழக்கு நிலுவையில் உள்ளதால் அதில் தலையிட முடியாது. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னர் முடிவு செய்யப்படும். எனவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

News October 8, 2024

ரூ.14,575 கோடியில் 2 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள்

image

தலைமைச் செயலகத்தில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.8) நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசாண் நிறுவனம் ரூ.13180 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கும் கேன்ஸ் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ.1395 கோடி முதலீட்டில், 1033 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது. இவை உட்பட 7 நிறுவனங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News October 8, 2024

21ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம்

image

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம், கடந்த 9ஆம் தேதி தொடங்கு தினமும் நடைபெற்று வருகிறது. பலதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு, தொடர் போராட்டம் தோல்வியடைந்து வரும் நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி.

image

காஞ்சிபுரத்தில் உள்ள மேட்டுத் தெரு, நெல்லுக்காரத் தெரு, ராஜாஜி மார்க்கெட் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. தற்போது, செங்கழுநீரோடை வீதியில் இயங்கும் டாஸ்மாக் கடை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. மேலும், சட்டம், ஒழுங்கிற்கும் பிரச்னையாக உள்ளதால், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

மாவட்ட பொறுப்பு அமைச்சராக காந்தி நியமனம்

image

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர பணிகளை கண்காணித்திடவும் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்த அரசு உத்தரவிட்டுள்ளது. இயற்கை சீற்றம், நோய்த் தொற்று அபாயம், அவசரக் கால பணிகளை கூடுதலாக செய்திட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து: 5 பேர் காயம்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில்,ம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வழக்கம் போல் போராட்டத்துக்கு சென்ற சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 5 தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News October 8, 2024

மருத்துவமனையில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

image

ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பழனி (60) – மனைவி அலமேலு (45) தம்பதியினரின் 4 வயது மகன் ருத்ர பிரசாத், தலையில் எலும்பு வீக்கம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நேற்று முன்தினம் வார்டில் தாவி குதித்து, விளையாடியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

error: Content is protected !!