India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை பீடத்திடமே திரும்ப ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட். யானைகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே வனத்துறை கொண்டு செல்லப்பட்ட 3 யானைகளை விரைவில் திரும்பும் என எதிர்பார்ப்பு.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ், சம்பள பாக்கி தராததால் நேற்று(ஜன.22) மாலை மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ரமேஷிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க.

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் 23.01.2026 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 11.00 மணிக்கு, மக்கள் நல்லுறவு கூட்டரங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் துரையை கடந்த 14-ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்தித் தாக்கியது. பின்னர், அவரிடமிருந்து ‘ஜி-பே’ மூலம் 8,000 ரூபாயைப் பறித்துக்கொண்டு பாதியில் இறக்கிவிட்டுத் தப்பினர். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார், தலைமறைவாக இருந்த சஞ்சய், பிரதீப் குமார், முகமது ரியாசுதீன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மக்களே..,, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <

ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில், உணவகத்தில் வேலை பார்த்து வந்த ரமேஷ் (38) என்ற மாற்றுத்திறனாளி சம்பள பாக்கியை வழங்காததால் மதுபோதையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் (31), திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.