India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது 5 மணி நிலவரப்படி 65.33% வாக்கு பதிவு ஆகி உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 6மணி வரையில்தான் வாக்குப்பதிவானது நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு ஆனது 53 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மணி நிலவரப்படி 53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது 1 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகப்பட்சமாக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 47.50 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும்,மாலை 6 மணிக்குள் 70-75 சதவிகித வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் அடுத்த சிறுக்காவேரிபாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் பழம், பனை நுங்கு, தென்னங்கன்று மூலம் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு வாக்கு செலுத்த வரும் இளம் வாக்காளர்கள் மரக்கன்று வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 11 மணி நிலவரப்படி 24.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 37.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் பகுதி மக்கள், பரந்தூர் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து இன்று தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதை தொடர்ந்து, தேர்தலை புறக்கணித்த மக்களிடம் வீடு வீடாக சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராமங்களில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. ஏகனாம்புரம் கிராமத்தில் 9 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குகளையும் அரசு அலுவலர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். நாகப்பட்டு கிராமத்தில் இதுவரை ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் இன்று மக்களவைத் தேர்தலை ஒட்டி தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் காலனியில் உள்ள இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கும் நிலையில், காலை 6 மணி முதல் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கட்சி முகவர் முன்னிலையில் அலுவலர்கள் மாதிரி வாக்குப்பதிவு சோதனை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் எங்கும் அரசு மதுபான டாஸ்மார்க் கடையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூபாய் 12 கோடி ரூபாய் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தில் தெரிவித்தனர். பிற நாட்களில் ஒரு நாளுக்கு ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.