Kanchipuram

News January 28, 2026

காஞ்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) காஞ்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க*

News January 28, 2026

காஞ்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 28, 2026

காஞ்சிபுரம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க.

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் அட்டூழியம் செய்த சகோதரர்கள்!

image

மாங்காடு அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ்(25). ஆட்டோ டிரைவரான இவருக்கு பாலா எனும் நண்பர் உள்ளார். இந்நிலையில், இவரது தாயார், பாலாவிடம், ‘என் பையனுடன் ஏன் சேருகிறாய்?‘ எனத் திட்டியதில் தகராறு ஏற்பட்டு, பாலாவை முத்துராஜ் தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த பாலா, நள்ளிரவில் முத்துராஜின் பைக், ஆட்டோவை தனது சகோதரருடன் சேர்ந்து தீ வைத்து எரித்தார். போலீசார் இருவரையும் தேடுகின்றனர்.

News January 28, 2026

காஞ்சிபுரம்: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

image

காஞ்சிபுரம் மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் மாதம் ரூ.7,000! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ.7000 சம்பாதிக்க ஓர் அரிய வாய்ப்பு. ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையின் மூலம் கமிஷனும் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.( SHARE IT )

News January 28, 2026

காஞ்சிபுரம்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

image

காஞ்சிபுரம் அடுத்த தாமல், முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், தாமல், பாலுசெட்டிசத்திரம், வதியூர், கிளார், களத்தூர், அவளூர், பெரும்புலிபாக்கம், கூத்திரமேடு, திருப்புட்குழி, சிருணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை(ஜன.29) காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் போலீஸ் வேலை ஆசையா..?

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி (PET,ET) தேர்வு இன்று(ஜன.28) முதல் ஜன.31 வரை பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

எம்..ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(28). ஆட்டோ டிரைவரான இவர், தனது நண்பர் பிரகாஷுடன் தேனாம்பாக்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். மது வாங்கச் சென்ற இடத்தில் இவருக்கும் பிரகாஷின் நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், நாகராஜின் கழுத்தில் கத்தியால் குத்தி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். நாகராஜ் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!