Kanchipuram

News April 24, 2024

சித்ரகுப்தர் கோயிலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

image

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில், இன்று(ஏப்.23) உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் டி.ராஜு சாமி தரிசனம் செய்தார். அவரை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் வான்மதி வரவேற்றார். அவருடன் வழக்கறிஞர்கள் தியாகராஜன், ரகுராமன், சம்பத், ஆறுமுகம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

News April 24, 2024

காஞ்சி: தத்ரூபமாக வரையப்பட்ட ஓவியங்கள்!

image

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உற்சவம் நடைபெறுவதை ஒட்டி இன்று(ஏப்.23) குதிரை வாகனத்தில் ஸ்ரீ கச்சபேஸ்வரர் வீதி உலா வரும் நிலையில், நேற்று(ஏப்.22) ரமணா கலைக்கூட கலைஞர்கள் கலை நுட்பத்துடன் வரைந்த ஓவியத்தை மக்கள் கண்டுகளித்தனர். காஞ்சியில் நடைபெறும் அனைத்து கோயில்களின் உற்சவ வாகனங்களை தத்ரூபமாக வரைந்து பொதுமக்கள் மத்தியில் காட்சிப்பட்டது.

News April 24, 2024

ஸ்ரீபெரும்புதூர் : 10 பேர் மீது வழக்கு

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் வாக்குப்பதிவை முழுவதுமாக புறக்கணித்தனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 10 பேருடன் கிராம மக்கள் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

News April 24, 2024

காஞ்சிபுரம்: பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல்(21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் இன்று வழக்கம்போல் பைக்கில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் சாலை வளைவில் திரும்பியபோது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மைக்கேல் உயிரிழந்தார்.

News April 24, 2024

குன்றத்தூர்: தேர் திருவிழாவை தொடங்கி வைத்த  அமைச்சர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருநாகேஸ்வரம், அருள்மிகு திருநாகேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இதனை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலைய இணை இயக்குநர் வான்மதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News April 22, 2024

ஏகனாபுரம்: 10 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தலை(ஏப்.19) புறக்கணித்து வாக்களிக்காமல் இருந்தனர். இது குறித்து, சமாதானம் பேசி ஓட்டுப்போட அழைப்பதற்காக வட்டாட்சியர் அப்பகுதிக்கு சென்றார். அப்போது, மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டது தொடர்பாக கிராம மக்கள் 10 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News April 22, 2024

காஞ்சிபுரம்: கணவன் – மனைவி பிரச்னையில் தற்கொலை

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகே ஆதனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், விக்னேஷ் கொக்கு மருந்து சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஏப்.22) உயிரிழந்தார்.

News April 21, 2024

காஞ்சி: ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி

image

காஞ்சிபுரம் , காந்தி சாலை பகுதியில் காஞ்சி எழிலன் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு தமிழ்நாடு தேர்வாணையம் பணிக்காக நடத்தும் தேர்வுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்து வருகின்றன. இதில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் விருப்பத்துடன் இலவச தேர்வு பயிற்சி பெற்று பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்டோர் அரசு பணி பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

News April 20, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 139 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைவுநிலை (LKG) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை rte.tnschools.gov.in இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News April 20, 2024

காஞ்சிபுரம்: வாக்குப்பதிவு பெட்டிகள் அறைக்கு சீல்!

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொன்னேரிக்கரை அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தேர்தல் பார்வையாளர்(பொது) பூபேந்திர எஸ்.சொளத்திரி, காவல் பார்வையாளர் பரத் ரெட்டி பொம்மா ரெட்டி  மேற்பார்வையில், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த அறை இன்று(ஏப்.20) சீல் வைக்கப்பட்டது.