Kanchipuram

News October 20, 2024

பிரதமர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

2024-25ஆம் கல்வியாண்டின் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல் (National Scholarship Portal) மூலம் பெறலாம். விண்ணபிக்க கடைசி நாள் வரும் 31ஆம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள் நவ.15ஆம் தேதி ஆகும். 9, 11ஆம் வகுப்பு புதிய விண்ணப்பதாரர்கள் 60% மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News October 19, 2024

ஆஸ்துமா, நுரையீரல் நோய்களுக்கு இலவச பரிசோதனை

image

காஞ்சிபுரம் தீபிகா மருத்துவமனையில், நாளை (அக்.20) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மூச்சுத்திணறல், நீண்ட கால இருமல், சளி, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான சிகிச்சை ஆலோசனைகளை மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் தீபிகா வழங்க உள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 19, 2024

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு நிலவரம்

image

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது நீர் இருப்பு 13.97 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, தண்ணீரின் அளவு 1.348 டி.எம்.சி.யாக உள்ளது. தற்போது குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

News October 19, 2024

நாளை இலவச மருத்துவ முகாம்: அனைவருக்கும் இலவசம்

image

காஞ்சிபுரம் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம்.அண்ணாமலை அறக்கட்டளை, போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனை, அனைத்து ரோட்டரி சங்கங்கள், இந்திய பல் மருத்துவ சங்கம் உள்ளிட்டவை இணைந்து, மாபெரும் இலவச இருதயம், பல், கண் பரிசோதனை மருத்துவ முகாம் நாளை (அக்.20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்பட உள்ளது. எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 19, 2024

கிராம மக்கள் குறைதீர் கூட்டம் தொடங்கியது

image

பொது வினியோக திட்டத்தின் கீழ், மாதந்தோறும் கிராமம் வாரியாக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள சிங்காடிவாக்கம் கிராமத்திலும், உத்திரமேரூரில் உள்ள மலையாங்குளம் கிராமத்திலும், வாலாஜாபாத்தில் உள்ள ஊத்துக்காடு கிராமத்திலும், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள காட்ராம்பாக்கத்திலும், குன்றத்துாரில் உள்ள படப்பையிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

News October 19, 2024

கஞ்சா சோதனையில் ஒரே நாளில் 9 பேர் கைது

image

காஞ்சிபுரம் போலீசார் நேற்று படுநெல்லி, வளத்தீஸ்வரர் தோட்டத்தெரு, திம்மசமுத்திரம், செவிலிமேடு, ஒரகடம் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருட்கள் விற்றதாக, புஷ்பராஜ் (28), சுரேஷ் (53), அன்பரசு (50), ஹரிஷ் (20), ஜெயக்குமார் (20), தாமோதரன் (20), ஜகதீஸ்வரன் (29), ரித்திக்ராஜ் (19), ஒடிசாவைச் சேர்ந்த சித்தார்த் குமார் பெஹரா (27) ஆகிய 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News October 19, 2024

நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

image

காஞ்சிபுரம், ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் பூந்தமல்லி நுாம்பல் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், 71ஆவது இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறுகிறது. பெரிய காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள குஜராத்தி திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த முகாமில், பங்கேற்க விரும்புவோர் 97914 08768, 95438 81888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 19, 2024

51 பேருக்கு தனியார் வேலை ஆணை வழங்கப்பட்டது

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. இதில், 15 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 175 நபர்களில், 51 பேருக்கு தனியார் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், 24 பேருக்கு 2ஆம் கட்ட நேர்முக தேர்வு நடைபெற உள்ளது என வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 19, 2024

வெள்ளிப் பதக்கம் வென்று பள்ளி மாணவிகள் அசத்தல்

image

குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில், ஒமேகா சி.பி.எஸ்.சி. பள்ளி அமைந்துள்ளது. இங்கு பயிலும் மாணவிகள், அரியானா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கோ-கோ விளையாட்டில் கலந்து கொண்டு 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய அளவில் காஞ்சிபுரம் மாணவிகள் வெற்றிபெற்றது மிகப்பெரிய பெருமை ஆகும்.

News October 19, 2024

இன்று இங்கெல்லாம் மின்தடை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (அக்.19) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காஞ்சிபுரத்தில் சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, சங்குசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சதாவரம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஐயம்பேட்டை, காந்தி சாலை, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!