Kanchipuram

News April 29, 2024

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்!

image

காஞ்சிபுரம் காந்திரோடு வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓரிக்கை வழியாக திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இந்த போக்குவரத்து மாற்றத்தினை காவல்துறையினர் செய்துள்ளனர்.

News April 28, 2024

முருகன் கோவிலில் நடிகர் சரத்குமார் சாமி தரிசனம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சரத்குமார் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அர்ச்சகர்கள், நடிகர் சரத்குமாருக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் ஆரத்தி செய்து சிறப்பித்தனர்.

News April 28, 2024

தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ராஜாஜி மார்க்கெட் எதிரில் இன்று (28/4/24) தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மோர், தன்னீர் பழம், வெள்ளரிப்பழம், இளநீர் ஆகியவற்றை கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். 

News April 28, 2024

காஞ்சிபுரம் அருகே 10 இளைஞர்கள் கைது

image

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ரிஷப்(18), அபினேஷ்(23), மோன்பாபு (21), சரவணன், பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த அரவிந்தன், கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜ் உள்ளிட்ட 10 பேரை  ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன் அதிரடியாக கைது செய்துள்ளார். 

News April 28, 2024

காஞ்சிபுரத்தில் இறையன்பு 

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 50ம் ஆண்டு நிறைவடைந்தது ஒட்டி ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்,  எழுத்தாளர் கல்வியாளர் பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட இறையன்பு, செவிலிமேடு தேவகி வெட்டிங் கன்வென்ஷன் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் வருகை புரிய உள்ளார்.

News April 27, 2024

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சிறப்பு!

image

காமகோட்டி நாயகி கோயில் என்று அழைக்கப்படும் காமாட்சி அம்மன் கோயில் 5-8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் நிறுவப்பட்டு 14ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இத்தல் தமிழகத்திலுள்ள சக்தி தலங்களில் ஒன்றாக உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் காமாஷி சன்னதியில் இந்து வடிவங்களில் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் திவ்ய தேசங்கலில் ஒன்றான வராஹப் பெருமாள் சன்னதியும் உள்ளது.

News April 27, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் பகுதி நேரமாக மாவட்டம், தாலுகா வாரியாக பணியாற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் அல்லது உங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறன் உடையவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 8340022122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News April 27, 2024

காஞ்சிபுரம்: குறைந்த செலவில் இரத்தம் சுத்திகரிப்பு!

image

காஞ்சிபுரம் கீழ்அம்பியில் முதல்முறையாக ஏழை எளிய மக்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்ட ரோட்டரி சங்கம் மூலம் சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் இயந்திரத்துடன் கூடிய மருத்துவமனை ரூ.3 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.2,000க்கு மேல் செலவாகும் நிலையில், இங்கு சேவை கட்டணமாக அதே தரத்துடன் ரூ.750 மட்டும் செலவு என கூறப்படுகிறது.

News April 27, 2024

காஞ்சியில் சந்திர பிரபை பவனி உலா

image

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற சொர்க்கவாசல் தலமாகிய ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் திருக்கோயிலில்,  நேற்று(ஏப்.26) இரவு 7 மணி அளவில் 4ம் நாள் விழாவில் சந்திர பிரபை அழகிய மலர் அலங்காரத்துடன் காஞ்சிபுரம் வீதிகளில் பவனி வந்தார். பெருமாளை தரிசிக்க மாலை முதல் மக்கள் கூடி அமர்ந்து தரிசித்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

News April 26, 2024

காஞ்சிபுரம் மக்களே உஷார்

image

மே 1 முதல் 4 வரை தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலையானது உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.