India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பெருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாசிலாமணி என்ற திருநங்கை, நேற்று(ஏப்.29) அதே பகுதியில் உள்ள தைலம் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த பெருநகர் காவல் நிலைய காவலர்கள் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலையா அல்லது தற்கொலையா என்ற கோலத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், சங்கர நேத்ராலயா, யங் இந்தியன்ஸ் ஆகியவை இணைந்து, ஓரிக்கை பாரதிதாசன் பள்ளியில் கடந்த ஒரு வாரமாக ‘இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம்’ நடைபெற்று வருகிறது. இந்த முகாம் இன்று(ஏப்.30) மதியம் 1 மணியுடன் நிறைவு பெறுகிறது. சிறப்பு வசதிகள் கொண்ட பேருந்து அறுவை சிகிச்சை செய்யப்படுவதும் நாளையுடன் முடிவடைகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிப்பட்டு பகுதியின் பின்புறம் பல வருடங்களாக விவசாயம் செய்து வந்த 10 ஏக்கர் நிலம் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு இன்றி இருந்து வரும் சூழலில், அந்த விளைநிலம் முட்செடிகள் வளர்ந்து காட்டுப் பகுதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் நேற்று(ஏப்.29) மாலை முட்செடிகள் மீது படர்ந்த தீப்பொறி தொடர் காற்று வீச்சின் காரணமாக மலமலவென கடும் காட்டு தீயாக மாறி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் லாரி மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஓட்டுனர் தயாளன் (36) மற்றும் குமார்(50) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
துபாய் நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான அத்லெடிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூர் 9-வது வார்டு பொன்னாமணியம்மன் தெருவைச் சேர்ந்த செளந்தர் ராஜன் அவர்களின் மகன் S.கார்த்திக் என்பவர் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மூன்றாம் இடம் பெற்றுள்ள கார்த்திக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவந்தது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது இன்றுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் முதன்மை பாட தாள்கள் திருத்தும் பணி நிறைவுபெற்ற நிலையில் இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவுபெற்றுள்ளது.
இன்று காஞ்சிபரம், பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குகள் பெற்ற வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மு.கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும் உள்நோயாளிகளிடம் மருத்துவம் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து பொதுவாக மருத்துவ ஆலோசனைக்காக காத்திருந்த முதியவரிடம் குறைகளை கேட்டறிந்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.கோபிநாத் இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறையில் 121 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் காந்திரோடு வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓரிக்கை வழியாக திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இந்த போக்குவரத்து மாற்றத்தினை காவல்துறையினர் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.