India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவல் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளில் காவலர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அவர்கள் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அரசு மரியாதை உடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டறங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் அவர்கள் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.63 உருளைக்கிழங்கு ரூ.60 சின்ன வெங்காயம் ரூ.45-50, பச்சை மிளகாய் ரூ.60 கத்தரிக்காய் ரூ.50 வெண்டைக்காய் ரூ.25 முருங்கைக்காய் ரூ.90 பீர்க்கங்காய் ரூ.60 சுரைக்காய் ரூ.30 புடலங்காய் ரூ.36 பாகற்காய் ரூ.60 முள்ளங்கி ரூ.48 பீன்ஸ் ரூ.180 அவரை ரூ.60.120 கேரட் ரூ.70 பூசணிக்காய் ரூ.30 பரங்கிக்காய் ரூ.30 விற்பனை செய்யப்படுகிறது.
நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது நிலத்தில் இன்று தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது திடீரென இடி தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிக்கைப்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்தவித விபரீதமும் நடந்தால், அட்டவணையில் கொடுக்கப்பட்ட உங்கள் பகுதி ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (21-10-2024) 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
கல்வராயன் மலையில் சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தான சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் எம் எஸ் சுப்பிரமணியன் வி.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மலை கிராமங்களில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை வசதிகள் உள்ளதா இல்லையா என வரும் 22 தேதி கள்ளக்குறிச்சி கலெக்டர் நேரில் ஆஜராகி கூறவும் வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்இன்று மாலை 3:30 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது, இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கள்ளக்குறிச்சிக்கு வருகை தருகிறார்.
Sorry, no posts matched your criteria.