Kallakurichi

News November 16, 2024

கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி ஆணை

image

கள்ளக்குறிச்சியில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற பொறியாளர்கள் 27 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து பி.இ. பி.டெக் படித்த பட்டதாரிகளுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 168 பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2024

கள்ளக்குறிச்சியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News November 15, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (15.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை – அண்ணாமலை

image

2023-ல் உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தைவானை சேர்ந்த காலணி நிறுவனம் 2302 கோடி முதலீடு செய்ததாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் சுமார் 20 மாதங்கள் கடந்தும் அந்த தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.

News November 15, 2024

அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையருமான வெங்கடேஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News November 15, 2024

நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17)  காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 15, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம், மூங்கில்பாடி துணை மின் நிலையம், எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன. கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மூங்கில்பாடி, திம்மாபுரம், மட்டப்பாறை, வெள்ளிமலை, மண்மலை, அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News November 15, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பிஇ, பி.டெக் பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். இன்று (நவ.15) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

கள்ளக்குறிச்சியில் இயக்குனர் முருகதாஸ் சாமி தரிசனம்

image

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பவித்திர உற்சவம் நிகழ்வில் இன்று தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை வழங்கப்பட்டது.

News November 14, 2024

இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைய ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய திருவிழா கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் 17.11.2024 அன்று கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!