India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுவரை 37 உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற கோகுல்தாஸ் தலைமையில் தனிநபர் விசாரணை அமைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 33 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 37 ஆகியுள்ளது. தொடர் மரணத்தால் கருணாபுரம் பகுதியே துக்கத்தில் மூழ்கியுள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல் துறையும் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதே பலரின் உயிரிழப்பு காரணம் என தெரிய வந்துள்ளது. சாராயம் குடித்து இறந்த சுரேஷ் என்பவரின் துக்க நிகழ்விலும் சாராயம் பரிமாறப்பட்டுள்ளது. அதை கள்ளச்சாராயம் என தெரியாமல் அருந்தியதால்தான் இத்துயர சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே, சுரேஷ் உயிரிழந்தது குறித்த காரணம் புரிந்துள்ளதாகவும் தகவல்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையை தொடங்கிய நிலையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் சேலம் டிஐஜி தெரிவித்துள்ளார். தொடர் மரணங்களால் கருணாபுரம் பகுதியே கண்ணீரில் தத்தளிப்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாளை விவாதிக்க சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்து அதிமுகவினர் நேரம் கேட்கவுள்ளனர். கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழக தலைவரும், பிரபல நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாரயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மன வேதனையை அளிக்கிறது எனவும், இனிமேலாவது தமிழக அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 21 பேரின் உட்றகூராய்வு நிறைவடைந்துள்ளதாக மருத்துவமனையில் ஆய்வு செய்த புதிய கலெக்டர் எம்.எஸ்.பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், கள்ளச்சாராய உயிரிழப்புகள் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்க, சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(ஜூன் 20) காலை 10 மணிக்கு இவர் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாரம் குடித்து பலர் உயிரிழந்துள்ள நிலையில் இது தொடர்பாக ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் மற்றும் எஸ்பி மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.