Kallakurichi

News November 28, 2024

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் மானியம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் படித்து வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு அம்பேத்கர் திட்டம், பாரத பிரதமர் திட்டம் என இளைஞர்களை தொழில் முனை ஊக்குவிக்கும் வகையில் தனி நபர் நிறுவனங்களுக்கு ரூ.20.72 கோடி மானியம் 3 ஆண்டில் மத்திய, மாநில அரசு வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News November 28, 2024

கள்ளக்குறிச்சி அருகே 15 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு 

image

சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் செலுத்த பலமுறை கூறியும் பலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து கட்டாதவர்கள் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்திருந்தனர். இருந்தும் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது

News November 27, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை செய்யலாம் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News November 27, 2024

மாவட்ட ஆட்சியரை சந்தித்த கைவினைக் கலைஞர்கள்

image

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைத்திறன் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்களை நேரில் சந்தித்து பரிசு தொகை பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

News November 27, 2024

வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் பாராட்டு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவி சசிகலா தேசிய அளவிலான 17 வயதிற்குட்பட்ட கபாடி போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அவரை பாராட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 27, 2024

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 28.11.2024 மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த வாராந்திர மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

News November 27, 2024

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை உளுந்தூர்பேட்டையில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக மா.செயலாளர் குமரகுரு அறிவித்துள்ளார்.

News November 27, 2024

உளுந்தூர்பேட்டையில் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று தொடர் மழையின் காரணமாக உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் LKG முதல் 5ஆம் வகுப்பு வரை, உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை, உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா CBSE பள்ளியில் LKG (ம) UKG வரை, உளுந்தூர்பேட்டை சிவாலயா பள்ளியில் LKG முதல் 6-ம் வகுப்பு வரையும், இன்று பள்ளி நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு.

News November 26, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (26.11.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது அல்லது 100 டயல் செய்யலாம்.

error: Content is protected !!