Kallakurichi

News November 30, 2024

அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய 2 தினங்களில் அதிகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மழைக்காலங்களில் அவசர உதவிக்கு 7397389323, 9865327478 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

கள்ளக்குறிச்சியை சேர்ந்த மர சிற்பிக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மர சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பகுதியாகும். இந்நிலையில் நேற்று மகாபலிபுரத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மர சிற்பி ராஜ்குமாருக்கு, தமிழக அரசின் சிறந்த கைவினைஞர் விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார். கைத்திறன் துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, மேலாண் இயக்குனர் அமிர்தஜோ உடனிருந்தனர்.

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சியில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நவம்பர் 30-ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் நாளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிர்வாக காரணங்களால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலத்தில் ரூ. 6.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சுற்றுலா மாளிகை கட்டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சுற்றுலா மாளிகை கட்டிடப் பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 29, 2024

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 5 அன்றும், நேரு பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 6 அன்றும், தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர், மாணவிகள் போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் 403 பேருக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் 403 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மூன்று கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் மானியத்தில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி தற்போது பயன் அடைந்து வருகிறார்கள் என கூறினார்.

News November 29, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை நேர்முகத் தேர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்காக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் நாளை கள்ளக்குறிச்சியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட மருத்துவ உதவியாளருக்கு தேவையான படிப்பு முடித்தவர்கள் உரிய சான்றிதழுடன் நாளை கலந்து கொள்ளலாம் என மேலாளர் தெரிவித்தார்.

error: Content is protected !!