India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1162 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் முன் பருவ கல்வி பயிலும் வகையில் 32,594 குழந்தைகள் முன் பருவ கல்விகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு குழந்தைகளுக்கு தினசரி எடை எடுக்கப்பட்டு சத்தான உணவுகள் சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை துணை ஆட்சியர் ஆனந்தகுமார் சிங் நேரில் ஆய்வு செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர் பட்டியல் விண்ணப்பம் குறித்து கேட்டறிந்தார்.
ஊரக வளர்ச்சி இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளிலும் இன்று 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.கூட்டத்தில், பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இன்று மாவட்ட வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் ஆணையர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 வயது பூர்த்தி அனைத்து முதல் தலைமுறை வாக்காளர்களும் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும் வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளதாகவும், நவம்பர் 25 முதல் 28 ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 27-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம்,ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நேற்று முன்தினம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க நடப்பு 2024-25ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 30.11.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்ய வேண்டும். சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த கால வரம்பை பயன்படுத்தி காப்பீடு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்( 21.11.2024 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் முழுவதும் 2,924 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும் அதற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.