India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினர் ரத்த தானம் வழங்கினார்கள். அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் டிஎஸ்பி அலுவலக எழுத்தர் (காவலர்) சிவக்குமார் ஆகியோர் ரத்ததானம் வழங்கினர். அதே போல் பல பேர் இன்று ரத்த தானம் வழங்கினார்கள்.
திருப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கத்தார் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகத்தின் சார்பாக 20 பேர் கலந்து கொண்டு 8 பேர் தங்கப்பதக்கமும் மற்றும் 12 பேர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பயிற்சியாளர்கள் சூரியமூர்த்தி, தமிழ்ச்செல்வன் ராகுல்பரதன் ஆகியோர் வாழ்த்தினர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து, கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், உடைமைகள் சேதமடைந்தன.இந்நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சேதங்கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியில் வெள்ள பாதிப்பு விபரங்கள் குறித்து மத்திய குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வெள்ள சேதங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர்கள் அதனை பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியின் நகர் மன்ற தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் மற்றும் 27 நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்திடம் இன்று வழங்கினர். இச்செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஆறு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் உபயோகமற்ற வாகன உதிரி பாகங்கள் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.60, கத்திரிக்காய் ரூ.70, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.50, பீர்க்கன்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.95, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலி பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் தியாகதுருகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் நெய்வேலிக்கு நேற்று சென்று கொண்டிருந்தபோது, பு.மாம்பாக்கம் அருகே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி துணி லோடு ஏற்றிக் கொண்டு வந்த சரக்குலாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வரும் டிச.9ஆம் தேதி நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புயல் மழை நிவாரண பணி மற்றும் பயிர் செய்த கணக்கெடுப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி இன்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்கிறார். அவ்வாறு செல்லும் வழியில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மூங்கில்துறைபட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.