Kallakurichi

News December 10, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை தக்காளி ரூ.38, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.50, பீர்க்கன்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.95, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 உள்ளிட்ட விலைகளுக்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 10, 2024

கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் மீது போக்ஸோ வழக்கு 

image

சோமாசிபாளையத்தை சேர்ந்த அரசு, 20. இவர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி இருவரது வீட்டிற்கும் தெரியாமல் கடத்திச் சென்று, திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றிருந்தபோது திருமண வயதை கடக்காததால் மருத்துவர்கள் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அரசை தேடி வருகின்றனர்.

News December 9, 2024

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (09.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

உயிரிழந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு நிவாரணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கருணாபுரம் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் நிதியுதவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 9, 2024

எய்ட்ஸ் நோய் குறித்த உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

News December 9, 2024

நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினரை கண்டித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

News December 9, 2024

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை கேட்பு முகாம் ரத்த

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை என்று குறை கேட்பு கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற வந்த குறை கேட்பு இன்று நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் யாரும் இன்று மனு அளிக்கும் வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News December 9, 2024

கள்ளக்குறிச்சியில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை சங்கராபுரம் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்கராபுரம், பாண்டலம், வட செட்டியந்தல், திம்மநந்தல், அரசம்பட்டு மஞ்சபுத்தூர், புதுப்பட்டு ரங்கப்பனூர், புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News December 8, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (8.13.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது .

News December 8, 2024

கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தெய்வ சகாயம் என்பவர் அவருடைய பெட்டி கடையில் 4830 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்து வந்தது கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!