Kallakurichi

News December 2, 2024

திருக்கோவிலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (டி 03) திருக்கோவிலூர் நகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் திருக்கோவிலூர் பகுதிகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2024

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி, தென்பெண்ணை ஆற்றில் கனமழை காரணமாக கரைபுரண்டோடும் வெள்ளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர், வருவாய்த்துறையினர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News December 2, 2024

திருக்கோவிலூரில் ஆட்சியர் ஆய்வு

image

திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் திருக்கோவிலூர் நகர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் நேரில் பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் முருகன் நகராட்சி ஆணையாளர் திவ்யா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News December 2, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையினால் உளுந்தூர்பேட்டை பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்பு குழு குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

News December 1, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News December 1, 2024

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கனமழை பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எம்.எஸ்.பிரசாநந்த் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

ஃபெஞ்சல் புயல் மாமால்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று கரையை முழுமையாக கடந்த நிலையில், அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது

News December 1, 2024

கள்ளக்குறிச்சியில் 2000 மில்லி மீட்டரை தாண்டிய மழையின் அளவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 இடங்களில் மழை அளவிடும் கருவி வைத்து மழையை அளவீடு செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 2331 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழையின் அளவு 97 மில்லி மீட்டராகும்.

News December 1, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம் 

image

தமிழகத்தில் பரவலாக நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் 34.5 மி.மீட்டர், கள்ளக்குறிச்சியில் 10 மி.மீட்டர், கச்சிராயபாளையம் 4 மி.மீட்டர், மாடாம்பூண்டி 11 மில்லி மீட்டர், திருப்பாலபந்தல் 10.5 மில்லி மீட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது.

error: Content is protected !!