India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுாரைச் சேர்ந்தவர் பாபு. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயிகளான இருவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது.கடந்த ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கொலை மிரட்டல் வாக்குவாதம் நடந்து ஜிப்மெரில் சிகிச்சை பெற்றனர். எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நேற்று பிரகாஷுக்கு 8 ஆண்டு சிறையும் 11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை முன்னிட்டு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆரோக்கியத்துடன் படிப்பை தொடர மாலை நேர சிற்றுண்டி வழங்க பங்களிப்பாளர்கள் முன் வரலாம். விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நாளை டிசம்பர் இருபதாம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளதாகவும் இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (19.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இயற்கையான முறையில் தோட்டக்கலைத்துறை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வரும் 26ஆம் தேதிக்குள் www.tnhorticulture.tn.gov.in என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும் என்ன கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 19.12.2024 காலை 10.00 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் செய்ய உள்ளனர். எனவே, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர். இதில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவு கோ-கோ, 19 வயது பிரிவு கபடி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.