India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 23) காய்கறி விலை. தக்காளி ரூ.24, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,முருங்கைக்காய் ரூ.100,முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய்கணேஷ் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்யில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய போது, ‘விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது தான் கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம் நடந்தது. கொழுத்து போய் விஷச்சாராயம் குடித்துவிட்டு செத்தார்கள் எனவும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக வட தமிழகத்தில் புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (22.13.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற நீலமங்கலம் பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (21.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இன்று மாலை 6:00 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் டிஸ்னி லேண்ட் வண்ண மலர் கண்காட்சிகளுடன் நடைபெற உள்ளது. அரையாண்டு விடுமுறை தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ள நிலையில், தற்போது இந்த கண்காட்சி முகாம் கள்ளக்குறிச்சி நடைபெறுவது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பெத்தாசமுத்திரம் மற்றும் திருக்கோவிலுார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக, திருக்கோவிலூர், கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனூர், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி,, மாடாம்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.