Kallakurichi

News December 26, 2024

19 கட்டிடங்கள் காணொளி காட்சி வாயிலாக திறப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதார துறையின் கீழ் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 19 கட்டிடங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜி.அரியூர் வட்டார அரசு சுகாதார நிலையத்தில் இருந்தவாறு இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

News December 26, 2024

கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வட பொன்பரப்பியில் இருந்து டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அப்போது டிராக்டர், வட கீரனூர் அருகே உள்ள ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்காலை கடந்து செல்லும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

News December 26, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 26, 2024

கள்ளக்குறிச்சியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News December 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையக் கட்டிடத்தினை நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

கள்ளக்குறிச்சி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கூட்டுரோடு அருகே இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மீது லாரி மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் வரும் ஜன.3ஆம் தேதி முதல் தொடங்கி வரும் ஜன.31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த  ஏழு தடுப்பூசி குழுக்கள் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 9 ஊ.ஒன்றியத்தில் நடைபெறும் எனவே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவசாயிகள் வேலையாட்கள் பற்றாக்குறை போக்கும் வகையில் 2024.25 ஆம் ஆண்டுக்கான வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர் கருவி வாங்கிட ரூ.1.20லட்சம் மானியம் மற்றும் களையெடுப்பு கருவி, ரூ.63,000 மானியத்திலும் விவசாயிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அணுகவும் கலெக்டர் தெரிவித்தார்.

News December 24, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (24.13.2024) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

error: Content is protected !!