Kallakurichi

News January 13, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதி உள்ள திருநங்கைகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் என தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.13) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

News January 13, 2025

அக்னிவீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க 27ம் தேதி கடைசி

image

அக்னிவீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 27ம் தேதி கடைசி நாள் என்பதால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ, 04151 – 295422 எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

News January 13, 2025

மாசில்லா போகியை கொண்டாட உறுதியேற்போம்

image

போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2025

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது; கலெக்டர் அறிவிப்பு

image

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் தகுதியான திருநங்கைகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றது. விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் (awards.tn.gov.in)என்ற இணையதளத்தில் தகுதியான திருநங்கைகள் பதிவு செய்யுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

News January 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (12.1.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது என 100-ஐ டயல் செய்யலாம்.

News January 12, 2025

திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

image

சின்னசேலம் கிழக்கு ஒன்றியம் சார்பில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுக்கும், பாக முகவர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுகளை வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

News January 12, 2025

திருக்கோவிலூர் அருகே விவசாயி தற்கொலை

image

திருக்கோவிலூர் அருகே உள்ள பெரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (60), விவசாயியான இவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தி.மலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2025

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய நிலவரம் (கிலோ) :  தக்காளி ரூ.24க்கும், கத்திரிக்காய் ரூ.40க்கும், அவரைக்காய் ரூ.110 க்கும், வெண்டை ரூ.40க்கும், முருங்கை ரூ.180க்கும், முள்ளங்கி ரூ.40க்கும், மாங்காய் ரூ. 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News January 12, 2025

கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமர்( 55) நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து தனது இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை எம்.எஸ்.தக்கா பகுதியில் வந்தபோது எதிரே கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ராமரின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!